Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெங்களூரு அங்காளபரமேஸ்வரி கோவிலில் ... கூடலூர் விநாயகர் கோவில் தேர் திருவிழா கூடலூர் விநாயகர் கோவில் தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை, தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவம்; இன்று குங்கும அர்ச்சனை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சென்னை, தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவம்; இன்று குங்கும அர்ச்சனை

பதிவு செய்த நாள்

27 பிப்
2024
11:02

சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவில் சம்ப்ரோக்‌ஷண ஓராண்டு நிறைவை முன்னிட்டு ஒன்பது நாள் பிரம்மோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

சென்னை, தி.நகரில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் பத்மவதி தாயார் கோவில் நிர்மாணிக்கப்பட்டு கடந்த ஆண்டு சம்ப்ரோக்‌ஷணம் விமர்சையாக நடந்தது. அதன் முதலாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு பத்மாவதி தாயார் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது.  இது தொடர்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த டி.டி.டி., தமிழக, புதுச்சேரி ஆலோசனைக்குழு தலைவர் சேகர் கூறியதாவது: முதலாம் ஆண்டு சம்ப்ரோக்‌ஷண நிறைவு விழாவை முன்னிட்டு ஒன்பது நாட்கள் பிரம்மோற்சவம் கொண்டாடப்படுகிறது. இன்று காலை 9:00 மணிக்கு குங்கும அர்ச்சனை நடக்கிறது. அதனை தொடர்ந்து விஷ்வக்சேன அராதனை, அங்குரார்ப்பணம் நடக்கிறது. நாளை 28ம் தேதி காலை 8:00 மணி முதல் 11:30 மணிக்குள் துவஜாரோஹணம் எனும் கொடியேற்றம் நடக்கிறது. 29ம் தேதி முதல் மார்ச், 6ம் தேதி வரை தினசரி காலை 9:00 மணிக்கும், இரவு 7:00 மணிக்கும் வாகன புறப்பாடு நடக்கிறது. இதில் மார்ச், 4ம் தேதி மாலை கருட வாகன புறப்பாடும், 6ம் தேதி ரத உற்சவமும் நடக்கிறது. மார்ச், 3ம் தேதி கஜ வாகன புறப்பாடு மாடவீதிகளை வலம் வருகிறது. ஆரத்தி எடுக்கும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. வரும், 29ம் தேதி முதல் மார்ச், 6ம் தேதி வரை தினமும் மதியம், 12:30 மணி முதல் 2:00 மணி வரை ஸ்நபன திருமஞ்சனம் நடக்கிறது. வரும், 28ம் தேதி முதல் மார்ச், 5ம் தேதி வரை தினமும் மாலை, 5:00 மணி முதல் 6:00 மணி வரை ஊஞ்சல் உற்சவம் நடத்தப்படுகிறது. பிரம்மோற்சவத்தின் அனைத்து நாட்களும் மாலை 6:0 மணி முதல் இரவு 7:00 மணிவரை இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தினசரி மாலை அன்னதானம் வழங்கப்படுகிறது. மார்ச், 7ம் தேதி சக்ர ஸ்நாதனமும், 8ம் தேதி புஷ்ப யாகமும் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு  ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் சென்று வர பயன்படும் ரோப் கார் சேவை பக்தர் மேம்பாட்டிற்கு துவங்கப்பட்டது.பழநி முருகன் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில், வருடாந்திர பிரம்மோற்சவத்தை ஒட்டி இன்று ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெறும் வெங்கடேஸ்வரப் பெருமானின் வருடாந்திர சலகட்ல பிரம்மோற்சவத்தின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar