Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூடுவாஞ்சேரியில் யோகி ... திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் பந்தம் பறி உற்சவம் திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக நிறைவு விழா
எழுத்தின் அளவு:
அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக நிறைவு விழா

பதிவு செய்த நாள்

27 பிப்
2024
02:02

கோவை ; அன்னூர் பகுதியில் அமைந்துள்ள தென் காளத்தி, மேற்றலை தஞ்சாவூர் என்று அழைக்கப்படும் அருந்தவ செல்வி உடனமர் ஸ்ரீ மன்னீஸ்வரர் சுவாமி கோவில் 6ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது.

செந்தமிழ் நாட்டில் சிறந்து விளங்கும் கொங்கு வளநாட்டின் வடபரிசார ஆறை வளநாட்டில் 5 மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மும்மைச் சிறப்புடையது அன்னூர் என வழங்கும் அன்னியூராகும். கிருதாயுகத்தில் வன்னிலிங்கம் எனவும், கிரேதாயுகத்தில் வானிலிங்கம் எனவும், துவாபரயுகத்தில் வள்ளிலிங்கம், கலியகத்தில் மன்னிலிங்கம் எனப் பெயர் பெற்றது. கலியுகத்தில் அன்னி எனும் இ வேடன் வாணி (பவானி) ஆற்றங்கரையில் வள்ளிக்கிழங்கு தோண்ட அதன் அடிவேர் அன்னியூரில் 3 உள்ளதைக் கண்டு தன் கடப்பாறையால் சோதிக்க, உதிரம் பீறிடக் கண்டு வணங்கி மகிழ்ந்தான். ஓ சேர மன்னன் இச்செய்தி கேட்டு வந்து பார்த்து, லிங்கத்தை யானையால் கட்டி இழுத்துப் பார்த்தும் இயலாததால் தன் சிறுமை பொறுக்க வேண்டி சிறந்த திருப்பணிகள் செய்தான். அங்ஙனம் அன்னி என்னும் வேடன் கடப்பாரையால் தோண்டிய குற்றத்தையும், சேரன் யானை கட்டி இழுப்பித்த குற்றத்தையும் மன்னித்து இனிமேல் தம்மை வந்து வணங்குவோர் குற்றத்தை பொறுப்பேன் என்று அருளிய "குற்றம் பொறுத்தநாதர்" சேரன் யானையைக் கட்டி இழுப்பித்த பின் அவன் அமைச்சர் 3 சமயனின் அன்பிற்காக இறகுகளுடன் இவ்வூரில் மன்னிய (என்றும் நிலை பெற்ற) சுயம்பு 3 மூர்த்தியாததாலும் இக்கோயில் இறைவர் மன்னீசர் எனச் சிறப்புப் பெயர் பெற்றவர். அம்பிகை தபோதக சௌந்தரி எனும் அருந்தவச் செல்வியாகவும், இக்கோயில் கல்வெட்டுக்கள் இக்கோயிலை "மேற்றலைத் தஞ்சாவூர்" என்று போற்றுகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் கும்பாபிஷேக நிறைவு விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை 9 மணி அளவில் கணபதி பூஜை, கலச ஆவாஹனம்,ருத்ர ஜெப பாராயணம்,சிறப்பு அலங்கார பூஜை அதை தொடர்ந்து பூரணாகதி, மகா தீபாராதனை ஆகியன நடைபெற்றன. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; ராம் நகர் கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் கார்த்திகை மாதம் நான்காவது சோமவார திங்கட்கிழமையை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலை, 2,668 அடி உயரம், 14 கி.மீ., சுற்றளவு கொண்டது. இதை சுற்றி, ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; 32 அடி உயர வெள்ளி ரிஷப வாகனத்தில் அருணாசலேஸ்வரர் மாட வீதி உலா வந்து ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ... மேலும்
 
temple news
தாண்டிக்குடி; திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி கோயில் விழாவில் பங்கேற்ற பக்தர்கள் சேற்றாண்டி வேடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar