Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் ... திருப்பதியில் பிப்ரவரி மாதத்தில் மட்டும் 19.06 லட்சம் பக்தர்கள் வழிபாடு திருப்பதியில் பிப்ரவரி மாதத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிம்ம வாகனத்தில் சென்னை, தி.நகர், பத்மாவதி தாயார் உலா வந்து அருள்பாலிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிம்ம வாகனத்தில் சென்னை, தி.நகர், பத்மாவதி தாயார் உலா வந்து அருள்பாலிப்பு

பதிவு செய்த நாள்

02 மார்
2024
10:03

சென்னை, சென்னை, தி.நகர், திருமலை திருப்பதி தேவஸ்தான பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவத்தில் சிம்ம வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தி.நகரில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில், பத்மாவதி தாயார் கோவில் நிர்மானிக்கப்பட்டு கடந்தாண்டு சம்ப்ரோக்ஷணம் விமர்சையாக நடந்தது. முதலாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, பத்மாவதி தாயார் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. பிரம்மோற்சவத்தில் நேற்று சிம்ம வாகனத்தில் பத்மாவதி தாயார் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.விழாவில் மார்ச் 6ம் தேதி வரை, தினமும் காலை 9:00 மணிக்கும், இரவு 7:00 மணிக்கும் வாகன புறப்பாடு நடக்கிறது. இதில் 4ம் தேதி மாலை கருட வாகன புறப்பாடும், 6ம் தேதி ரத உற்சவமும் நடக்கிறது. மார்ச், 3ம் தேதி கஜ வாகன புறப்பாடு மாடவீதிகளை வலம் வருகிறது. ஆரத்தி எடுக்கும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. தினமும் மதியம், 12:30 மணி முதல் 2:00 மணி வரை ஸ்நபன திருமஞ்சனம் நடக்கிறது. மார்ச் 5ம் தேதி வரை தினமும் மாலை, 5:00 மணி முதல் 6:00 மணி வரை ஊஞ்சல் உற்சவம் நடத்தப்படுகிறது. அனைத்து நாட்களும் மாலை 6:00 மணி முதல் இரவு 7:00 மணிவரை இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாலை அன்னதானம் வழங்கப்படுகிறது. 8ம் தேதி புஷ்ப யாகம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar