Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி காந்தகுளத்து ... பட்டாளம்மன் கோயில் விழா; பக்தர்கள் அக்னி சட்டி நேர்த்திக்கடன் பட்டாளம்மன் கோயில் விழா; பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குஞ்சப்பனை மகா மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குஞ்சப்பனை மகா மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

03 ஏப்
2024
04:04

மேட்டுப்பாளையம்; குஞ்சப்பனை மகா மாரியம்மன் கோவிலில், குண்டம் விழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தில் குஞ்சப்பனை மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் குண்டம் திருவிழா, கடந்த மாதம், 19ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. 26ம் தேதி அக்னி கம்பம் நடப்பட்டது. 29ம் தேதி நடந்த திருவிளக்கு பூஜை வழிபாட்டில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். 31ம் தேதி கற்பக விநாயகர் கோவிலில் இருந்து, பால் மற்றும் தீர்த்த குடங்களை எடுத்து வந்தனர். கடந்த இரண்டாம் தேதி அக்னி குண்டம் திறக்கப்பட்டது. இன்று காலை பவானி ஆற்றில் இருந்து, குதிரை வாகனத்தில் அம்மன் சுவாமியை அழைத்து வந்தனர். 7:45 மணிக்கு கோவில் தலைமை பூசாரி வெள்ளியங்கிரி, குண்டத்தை சுற்றி சிறப்பு பூஜை செய்து, முதலில் குண்டத்தில் இறங்கினார். அவரைத் தொடர்ந்து உதவி பூசாரிகள், ஆண்கள், பெண்கள், மாணவ, மாணவியர், சிறுவர் என ஏராளமானவர்கள் குண்டத்தில் இறங்கி, தீ மிதித்து நேர்த்திக் கடனை செலுத்தினர். மதியம் மாவிளக்கு பூஜையும், மாலையில் அழகு குத்தி தேர் இழுத்தலும் நடைபெற்றது. நாளை கோவிலில் அன்னதானமும், அதைத் தொடர்ந்து அம்மன் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. ஐந்தாம் தேதி மஞ்சள் நீராட்டும், அபிஷேக பூஜையும், 9ம் தேதி மறு பூஜையும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர், பொது மக்களும் ஆகியோர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செப்.27 ல் மதுரை வருகிறார். அன்று மாலை 5:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar