Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ... தேர்தலில் தவறாது ஜனநாயக கடமையாற்றிய சத்குரு தேர்தலில் தவறாது ஜனநாயக கடமையாற்றிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரை வீர அழகர் கோயிலில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மானாமதுரை வீர அழகர் கோயிலில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

19 ஏப்
2024
03:04

மானாமதுரை; மானாமதுரை வீர அழகர் கோயிலில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது.வருகிற ஏப்.23ம் தேதி வைகை ஆற்றில் அழகர் இறங்குகிறார்.

சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை வீர அழகர் கோயிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். விழா நாட்களின் போது தினந்தோறும் சுவாமி கருடன், யானை, அனுமார், ஷேச உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மண்டகப்படிகளில் எழுந்தருளி வீதியுலா செல்வது வழக்கம். இந்தாண்டிற்கான சித்திரை திருவிழா இன்று துவங்கியதை யடுத்து காப்பு கட்டுதலுக்காக அதிகாலை சுவாமிக்கு 18 வகையான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து உற்சவர் வீர அழகர் ஸ்ரீதேவி,பூதேவியுடன் எழுந்தருளினார். பின்னர் அர்ச்சகர் கோபி மாதவன் உற்சவர் கைகளில் காப்பு கட்டினார்.பின்னர் தீபாராதனை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான எதிர்சேவை ஏப்.22ம் தேதி இரவு 10:00 மணியிலிருந்து 11:00 மணிக்குள்ளும், ஏப்.23ம் தேதி வீர அழகர் ஆனந்தவல்லி அம்மன் கோயில் எதிர்புறம் ஆற்றில் இறங்குதல் காலை 6:15மணியிலிருந்து 7:31 மணிக்குள்ளும் நடைபெற உள்ளது. மறுநாள் ஏப்ரல் 24ஆம் தேதி நிலாச்சோறு நிகழ்ச்சியும், ஏப்.25ம் தேதி தசாவதாரம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. ஏப்.27ஆம் தேதி சந்தன காப்பு உற்சவத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சீனிவாசன், அர்ச்சகர் கோபி மாதவன்(எ) முத்துச்சாமி உட்பட பலர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar