Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாகிஸ்தான் சிவன் கோவிலில் ... ராமேஸ்வரம் கோயிலில் ரூ.1 கோடியில் மண்டபம்! ராமேஸ்வரம் கோயிலில் ரூ.1 கோடியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மெத்தனம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 நவ
2012
10:11

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகாரசுவாமி கோவிலுக்கு சொந்தமான, தெப்பக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.ஸ்ரீபெரும்புதூரில் புகழ்பெற்ற, ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம், தேரடி சாலைக்கும், தேசிய நெடுஞ்சாலைக்கும் நடுவில், நான்கு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்குளத்தில் ஆண்டு தோறும் நான்கு நாட்கள் தெப்போற்சவம் நடைபெறும். அதைக் காண வரும் பக்தர்களின் வசதிக்காக, குளத்தை சுற்றி சாலை அமைக்கப்பட்டது.தற்போது, தெப்பக்குளம் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளது. பொதுமக்கள் வசதிக்காக அமைக்கப்பட்ட தெப்பக்குளம், சாலையை சிலர் ஆக்கிரமித்து, குடிசை போட்டனர். அவற்றுக்கு மின் இணைப்பும் வழங்கப்பட்டது. கழிவுநீர் கலப்பு குடிசை வீடுகள், நாளடைவில் நிரந்தர வீடுகளாக மாறின. இவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர், தெப்பக்குளத்திற்கு திருப்பி விடப்பட்டது. இதனால், புண்ணிய தீர்த்தம் என்று பெயர் பெற்ற கோவில் தெப்பக்குளம், கழிவுநீர் குட்டையாகி விட்டது. இதனால், ஆண்டாண்டாக நடந்து வந்த பிரபலமான தெப்போற்சவம் நிறுத்தப்பட்டது.தெப்பக்குளம் இருந்த இடம் தெரியாமல் மறைவதற்கு முன்பாக, இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள், தெப்பக்குளத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு, குளத்தை சீரமைத்து தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தயக்கம்: இதையடுத்து, ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகாரசுவாமி கோவில் நிர்வாகம் சார்பில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு, 10 நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, நோட்டீஸ் வழங்கப்பட்டது. நோட்டீஸ் வழங்கியதோடு அதிகாரிகள் அமைதியாகிவிட்டனர். ஆக்கிரமிப்பு அகற்றுவதில், கோவில் நிர்வாகம் தயக்கம் காட்டி வருகிறது என, பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இதுகுறித்து செயல் அலுவலர் தியாகராஜன் கூறியதாவது:ஆக்கிரமிப்பாளர்கள் 30 பேருக்கு, இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையர் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. சில தினங்களுக்குள் ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவ முதல் நாள் விழாவில், ... மேலும்
 
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar