Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மங்கல இசை கற்பதில் ஆர்வம் காட்டும் ... எரியோடு ஷீரடி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை ஆரத்தி பூஜை எரியோடு ஷீரடி சாய்பாபா கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிருஷ்ணகிரி அரு‍‍கே 586 ஆண்டு பழமையான விஜயநகரர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கிருஷ்ணகிரி அரு‍‍கே 586 ஆண்டு பழமையான விஜயநகரர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

16 மே
2024
04:05

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகமும், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு இணைந்து ஆய்வு மேற்கொண்டதில், தீர்த்தம் அடுத்த ஹளே கிருஷ்ணாபுரம் கிராமத்தில், 586 ஆண்டு பழமையான விஜயநகரர் காலத்து, கல்வெட்டு ஒன்றை கண்டறிந்துள்ளனர்.

இது குறித்து, கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: கிராமம் நடுவே, பசப்பா என்பவரது வீட்டின் அருகே கருங்கல் குண்டை சுற்றிலும், 20 அடி நீளத்தில், 7 வரிகளில் இக்கல்வெட்டு உள்ளது. மேல்புறம் திரிசூலமும், கீழ்புறம் அழகிய காளையும், அருகே குடை மற்றும் கொடியும் கோட்டுருவமாய் காட்டப்பட்டுள்ளன. இக்கல்வெட்டு, 586 ஆண்டுகளுக்கு முன் விஜயநகர மன்னர், 2ம் தேவராயன் காலத்தை சேர்ந்தது. அப்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தை உள்ளடக்கிய முள்வாய் ராஜியத்தை (தற்போது கர்நாடகா மாநிலம் முலுபாகல்) லக்கண தண்ணாயக்கர் ஆண்டு வந்தார். இங்கு தியாகப்பெருமாள் என்னும் பெயரில் சிவன் கோவில் அப்போது இருந்துள்ளது. அக்கோவில் பூஜை செலவிற்காக பொன்னக்கோன் பள்ளியை தானமாக அளித்த செய்தியை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. ஹளே கிருஷ்ணாபுரம் அக்காலத்தில் பொன்னக்கோன்பள்ளி என்று அழைத்ததும், இவ்வூருக்கு அருகில் தியாகப்பெருமாள் என்ற பெயரில் சிவன் கோவில் இருந்ததும், இக்கல்வெட்டு மூலம் தெரிய வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.  இதில், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், சின்னகொத்துார் மணிகண்டன், நல்லுார் பஞ்., தலைவர் கல்யாணி ஆகியோர் உடனிருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar