Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வள்ளிமலையில் புராதன கல்வெட்டுகள் ... ஆலந்துறை காமாட்சி அம்மன் கோவில் திருவிழா நிறைவு; கொட்டும் மழையில் பக்தர்கள் நேர்த்திக்கடன் ஆலந்துறை காமாட்சி அம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சித்திரை தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சித்திரை தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்

பதிவு செய்த நாள்

16 மே
2024
05:05

நாகர்கோவில்; சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் நடைபெற்ற சித்திரை திருவிழா தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

சிவன், பிரம்மா, விஷ்ணு என மும்மூர்த்திகளும் மூலவராக அருள் பாலிக்கும் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான சித்திரை திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலையிலும் மாலையிலும் சுவாமி வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்பதாம் திருவிழாவான இன்று (16ம் தேதி) காலை 6:00 மணிக்கு இந்திர வாகனத்தில் மகாவிஷ்ணு, அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து காலை 8:30 மணிக்கு விநாயகர் தேரில் விநாயகர், அம்மன் தேரில் சுவாமி அம்பாள் மற்றும் பெருமாள், சப்பர தேரில் அம்மன் விக்ரகங்கள் வைக்கப்பட்டு வடம் பிடித்து தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். இரவு 9:00 க்கு ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும் தொடர்ந்து சப்தாவரணம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 10- ம் நாள் விழாவான நாளை காலை 10:30க்கு மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெறும். இரவு 8:30 க்கு சுவாமி அம்பாள் பெருமாள் ஆகியோரை அலங்கரிக்க செய்து தெப்பத்தில் வைத்து தெப்பக்குளத்தை மூன்று முறை வலம் வரும் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. நள்ளிரவு 12:00 மணிக்கு ஆராட்டுடன் திருவிழாநிறைவு பெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ஏழாம் ... மேலும்
 
temple news
தேனி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar