Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோவிலில் குரு ... நாக வாகனத்தில் வீதியுலா வந்த வடபழனி ஆண்டவர்; இன்றிரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நாக வாகனத்தில் வீதியுலா வந்த வடபழனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனாருக்கு திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனாருக்கு திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

17 மே
2024
10:05

சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் திருக்கல்யாணம் நேற்று நடந்தது.

சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயில் வைகாசி விசாகத் திருவிழா மே 12 ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5ம் மண்டகப்படி நாளான நேற்று திருக்கல்யாணம் நடந்தது. மாலை 6:30 மணிக்கு பூரண புஷ்கலா தேவி, சேவுகப்பெருமாள் ஐயனாருக்கு அலங்காரம் செய்யப்பட்டு திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு கிராமத்தார்கள் முன்னிலையில் திருக்கல்யாண வைபவம் நடந்தது. கோயில் சிவாச்சாரியார்கள் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து ஊஞ்சலாட்டு நிகழ்ச்சி நடந்தது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு ஸர்ப்ப வாகனத்தில் சுவாமி வீதியுலா வந்தார். 6ம் திருவிழாவான இன்று இரவு கழுவன் திருவிழா நடக்கிறது. மே 20ஆம் தேதி தேரோட்டமும், 21ஆம் தேதி பூப்பல்லக்கு உற்சவமும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar