Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வில்லியனூர் திருக்காமீஸ்வரர் ... கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் புகுந்த மழை நீர் கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குதிரை வாகனத்தில் உலா வந்த வடபழநி ஆண்டவர்; நாளை வைகாசி விசாகம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குதிரை வாகனத்தில் உலா வந்த வடபழநி ஆண்டவர்; நாளை வைகாசி விசாகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

21 மே
2024
10:05

சென்னை; வடபழநி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நேற்று குதிரை வாகனத்தில் எழுந்தருளி, வீதியுலா வந்து சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நாளை வைகாசி விசாக விழா கோலாகலமாக நடைபெற உள்ளது.

சென்னை, வடபழனியில் அமைந்துள்ளது ஆண்டவர் கோவில். முருகன் கோவில்களில் தொன்மையான தென்பழனிக்கு நிகராக இக்கோவில் புகழ்பெற்று விளங்குகிறது. இக்கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து, அலகு குத்தி வேண்டுதல் நிறைவேற்றும் தலமாகவும் திகழ்கிறது. இக்கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு,10 நாள் பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில் தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலித்து வருகிறார். விழாவில் நேற்று குதிரை வாகனத்தில் எழுந்தருளி, வீதியுலா வந்து சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

வைகாசி விசாகமான, நாளை 22ம் தேதி காலை 9:00 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சண்முகர் விதிஉலா நடக்கிறது. காலை 10:00 மணிக்கு தீர்த்தவாரி உற்சவமும், கலசாபிஷேகமும் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், மயில்வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது. பின், சுப்பிரமணியவர் வீதி உலாவினை அடுத்து துவஜ அவரோஹணம் எனும் கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது. வரும், 23ம் தேதி இரவு விசேஷ புஷ்ப பல்லக்கு புறப்பாடு, சுப்பிரமணியர் வீதி உலா நடக்கிறது.  வைகாசி விசாக பிரம்மோற்சவ விடையாற்றி கலை நிகழ்ச்சிகள் வரும், 24ம் தேதி முதல் ஜூன், 2ம் தேதி வரை தினமும் மாலை நடக்கிறது. இதில், பரதநாட்டியம், சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி, வீணை கச்சேரி, இசை சொற்பொழிவு ஆகியவை நடக்கின்றன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar