Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிருஷ்ணகிரி லட்சுமி நரசிம்ம ... இளங்குடியில் படைப்புத் திருவிழா; பால்குடம், பூத்தட்டு எடுத்த கிராமத்தினர் இளங்குடியில் படைப்புத் திருவிழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தொட்டில் வாகனத்தில் பவனி வந்த சாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தொட்டில் வாகனத்தில் பவனி வந்த சாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி

பதிவு செய்த நாள்

25 மே
2024
12:05

தென்தாமரைகுளம், சாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா நேற்று 24ம் தேதி கொடி யேற்றத்துடன் துவங்கி யது.விழா 11 நாட்கள் நடக்கிறது. சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி, தை மாதங்களில் 11 நாட் கள் திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு வைகாசிதிருவிழா நேற்று 24ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிட்டு பள்ளியறை திறத்தல், காலை 5 மணிக்கு அய்யாவுக்கு பணி விடை, தொடர்ந்து கொடிப்பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. காலை 5.30 மணிக்கு குரு சுவாமி தலைமையில் குரு ராஜசேகரன் திருக்கொடியேற்றினார். நண்பகல் 12 மணிக்கு வடக்கு வாச லில் அன்னதர்மம், இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி பவனி வருதல் நடந்தது.

2ம் நாளான இன்று இரவு அய்யா பரங்கி நாற்காலியில் பவனி வருதல், 3ம் நாளான நாளை அன்ன வாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம்வருதல், 4ம் நாள் பூஞ்சப்பர வாக னத்தில் வலம் வருதல், 5ம் நாள் பச்சை சாத்தி அன்ன வாகனத்தில் பவனி வருதல், 6ம் நாள் கற்பக வாகன பவனி, 7ம் நாள் சிவப்பு சாத்தி கருட வாகனத்தில் பவனி வருதல் நடக்கிறது. வரும் 31ம் தேதி 8ம் திருவிழாவில் அய்யா வெள்ளை வாகனத்தில் குதிரை முத்திரி கிணற்றின் கரையில் கலிவேட்டையாடுதல், தொடர்ந்து பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி, இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யா தவக் கோலத்தில் காட்சிதரும் நிகழ்வு, தொடர்ந்து அன்னதர்மம் நடக்கிறது. 9ம் நாள் இரவு அனுமன் வாகன பவனி, 10ம் திருவிழாவான (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணிக்கு இந்திர விமான வாகன பவனி 11 திருவிழாவான ஜூன் மாதம் 3ம் தேதி திங்களன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட் டம் நடக்கிறது. இரவு 12 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை குரு மார்கள் சுவாமி, தங்க பாண்டியன், ராஜசேகரன், வக்கீல் ஆனந்த், இன்ஜினியர் அர விந்த், வக்கீல் அஜித் ஆகியோர் செய்து பக்தர்களுக்கு அருள்பா வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar