Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கல்வாய் திரவுபதி அம்மன் கோவிலில் ... திருவாலங்காடு திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா திருவாலங்காடு திரவுபதியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடகாஞ்சி; மீஞ்சூர் பெருமாள் கோவில் தேர் திருவிழா விமரிசை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வடகாஞ்சி; மீஞ்சூர் பெருமாள் கோவில் தேர் திருவிழா விமரிசை

பதிவு செய்த நாள்

27 மே
2024
11:05

மீஞ்சூர்: வடகாஞ்சி எனப்படும் மீஞ்சூர் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜப்பெருமாள் திருக்கோவில், பிரம்மோற்சவம் கடந்த, 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, சூர்ய பிரபை, சந்திர பிரபை, கருடசேவை, அனுமந்த வாகனம், கேடய புறப்பாடு, நாகவாகனம், ஆளும் பல்லக்கு, ஹம்ச வாகனம், திருக்கல்யாணம், யானை வாகனம் என, தினமும் காலை, மாலையில் உற்சவங்கள் நடந்தன. பிரம்மோற்சவத்தின், ஏழாம் நாளான நேற்று, ரத உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது. வண்ண மலர்கள், துணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த மரத்தேர், காலை, 8:00 மணிக்கு வாண வேடிக்கை, மங்கள இசையுடன் நிலையில் இருந்து புறப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி உடன் உற்சவ பெருமான், 43 அடி மரத்தேரில் வீற்றிருந்தார். பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பியபடி, பக்தி பரவசத்துடன் தேரின் வடம் பிடித்து இழுத்து சென்றனர். மாடவீதிகள் வழியாக திருவீதி உலா வந்த வரதராஜ பெருமாள் அருள்பாலித்தார். பக்தர்களுக்காக, தன்னார்வலர்கள் குளிர்பானம், மோர் மற்றும் உணவு பொருட்களை வழங்கினர். மின்வாரியம், காவல், தீயணைப்பு ஆகிய துறையினர் தேர் சென்ற மாடவீதிகளில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். மீஞ்சூரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து, பக்தர்கள் திரளாக பங்கேற்று, பெருமாளை வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar