Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்தி விநாயகர் கோவில் ஜூன் 12ல் ... அக்னி நட்சத்திர வெயில் நிறைவு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னி தோஷ நிவர்த்தி பூஜை
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னி தோஷ நிவர்த்தி பூஜை

பதிவு செய்த நாள்

29 மே
2024
03:05

திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், அக்னி தோஷ நிவர்த்தி பூஜை நடந்தது.

அக்னி நட்சத்திரம் கடந்த, 4ல், தொடங்கி நேற்று வரை இருந்தது. இக்காலத்தில் வெப்பம் கடுமையாக இருக்கும். இந்த நாட்களில், இறைவனை குளிர்விக்கவும், எல்லா ஜீவராசிகளை பாதுகாக்க வேண்டியும், கோடையின் தாக்கம் குறைந்து, போதிய மழை பெய்ய வேண்டியும், தோஷ நிவர்த்திக்காக சிவன் கோவில்களில், உச்சிகால அபிஷேக பூஜை நடக்கும் நேரமான, 11:30 மணிக்கு தொடங்கி, சாயரட்சை பூஜை நடக்கும் நேரமான, மாலை 6:00 மணி வரை தாரா அபிஷேகம் நடக்கும். அதன்படி அருணாசலேஸ்வரர் கோவிலில், பன்னீர், விளாமிச்சை வேர், பச்சை கற்பூரம், வெட்டிவேர், ஏலக்காய், ஜாதிக்காய், ஜவ்வாது, சந்தனம் போன்ற வாசனை திரவியங்களை தாரா பாத்திரத்தில் ஊற்றி, அதை மூலவர் லிங்கம் மீது சொட்டு சொட்டாக விழும்படி, தாரா அபிஷேகம் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று, 28 ல் அக்னி நட்சத்திரம் நிறைவுறுவதையொட்டி கடந்த, 26 ல் மாலை அக்னி தோஷ நிவர்த்தி, 1,008 கலசாபிஷேக, முதல்கால பூஜை தொடங்கியது.  இதில் கணபதி பூஜை  உள்ளிட்ட பூஜை நடந்தது.  தொடர்ந்து, 2, 3 மற்றும் 4ம் கால பூஜை நடத்தப்பட்டு, நேற்று காலை, 11:00 மணிக்கு யாகசாலையில் வைக்கப்பட்ட, 1,008 கலச புனித நீரை கொண்டு, அருணாசலேஸ்வரருக்கு அக்னி தோஷ நிவர்த்தி கலசபாபிஷேகம் நடந்தது. இரவு  ரிஷப வாகனத்தில் உண்ணாமுலை அம்மன் சமேதராய் அண்ணாமலையார் மாடவீதி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar