Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் ... சதுரகிரியில் அமாவாசை வழிபாடு; திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் சதுரகிரியில் அமாவாசை வழிபாடு; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பகவதி கோவில் திருவிழா; பழங்குடியின மக்கள் உற்சாகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பகவதி கோவில் திருவிழா; பழங்குடியின மக்கள் உற்சாகம்

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2024
03:06

பந்தலூர்; பகவதி அம்மன் கோவில் திருவிழாவில் பழங்குடியின மக்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.

பந்தலூர் அருகே பொன்னானி ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழா நடந்தது. பொன்னானி, அம்பலபாடி, சர்க்கரைகுளம், குன்றில்கடவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பழங்குடியின மக்கள் இணைந்து நடத்திய திருவிழாவில், விரதம் இருந்த பக்தர்கள், தங்கள் குலதெய்வ வீட்டில் இருந்து சாமியாட தேவையான வாள், பிரம்புகள் மற்றும் துணிகள் உள்ளிட்ட பூஜை பொருட்களை, ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். மரங்களுக்கு மத்தியில் இருந்த கோவில் சுத்தம் செய்யப்பட்டு, அரிசி, சந்தனம் சேர்த்து அரைக்கப்பட்டு, நீராடிய பின்னர் அதனை சாமியாடும் நபர்களுக்கு உடலில் பூசி, குங்குமம் வைத்து அலங்காரம் செய்தனர். பின்னர் வன தேவதைகளை வணங்கி, பக்தியுடன் சாமியாடி, தேங்காய் உடைத்து குறி சொல்லி, பக்தர்களுக்கு அரிசியை பிரசாதமாக வழங்கினார்கள். அப்போது பக்தர்கள் தங்களின் குறைகளை தீர்த்து வைக்கவும், கிராமங்களின் பிரச்சினைகளையும் தீர்க்கவும் தெய்வம் துணை நிற்க வேண்டுமென தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து தீர்த்தம் வழங்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் நெல் வறுக்கப்பட்டு, பழங்குடியின பெண்கள் இணைந்து உடலில் இடித்து அதனை அவல் ஆக மாற்றி சாமிக்கு படைத்து பக்தர்களுக்கு வழங்கினார்கள். திருவிழா மற்றும் பூஜைகளில் பழங்குடியின மக்கள் மட்டும் இன்றி வயநாடு செட்டி சமுதாய மக்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்று பகவதியின் அருள் பெற்று சென்றனர். ஏற்பாடுகளை வேலன், விஜயன், செங்குட்டவன், ராஜன், வாசு, மணிவேலன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழக கோயில்களில் மொபைல் போன்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar