Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கம்பீர விநாயகர் கோவிலில் மண்டல பூஜை ... ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஆஸ்ரமத்தில் மஹாதேசிகன் 90வது திருநட்சத்திர மஹோத்சவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துாரிலிருந்து அறுபடை வீடுகளுக்கு 202 பக்தர்கள் ஆன்மிகப் பயணம் இன்று துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருச்செந்துாரிலிருந்து அறுபடை வீடுகளுக்கு 202 பக்தர்கள் ஆன்மிகப் பயணம் இன்று துவக்கம்

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2024
11:06

திருச்செந்துார்; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்துஅறுபடை வீடு ஆன்மிக பயணத்திற்கு 202 பக்தர்கள் இன்று புறப்படுகின்றனர். இந்து சமய அறநிலையத் துறை சார்பில் முருகப் பெருமானின் அறுபடை வீடு ஆன்மிக பயணத்திட்டமானது தங்கும் இடம், உணவு வசதியுடன் இலவச பயணமாக 60 முதல் 70 வயதுக்குட்ட பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

முதற்கட்டமாக கடந்த ஜனவரி மாதத்திலும், இரண்டாம் கட்டமாக கடந்த மார்ச் மாதத்திலும், தற்போது மூன்றாம் கட்டமாக இன்று (ஜூன் 7) திருச்செந்துாரில் இருந்து ஆன்மிக பயணம் தொடங்குகிறது. இந்த பயணத்தில் மதுரை, சிவகங்கை, நெல்லை மற்றும் துாத்துக்குடி மண்டலங்களைச் சேர்ந்த சுமார் 202 பக்தர்கள் அறநிலையத்துறை அலுவலர்கள் உட்பட 40 பேர் என மொத்தம் 242 பேர் 5 பஸ்களில் பயணிக்கின்றனர். மேளதாளம் முழங்க வரவேற்பு: இதை முன்னிட்டு நேற்று மாலை ஆன்மிக பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோயிலில் மேள, தாளம் முழங்க வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் கோயிலில் நேர் வழியில் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு தரிசனம் செய்தனர். சண்முக விலாசம் மண்டபத்தில் வைத்து பக்தர்களுக்கு கோயில் சார்பில் பிரசாதப்பையை இணை ஆணையர் கார்த்திக் வழங்கினார். நிகழ்ச்சியில் கண்காணிப்பாளர்கள் ரவீந்திரன், வெங்கடேஸ்வரன், சீதாலட்சுமி,
கோமதி, அஜித், வேதமூர்த்தி, ராமமூர்த்தி, செந்தில்வேல்முருகன், விஜயலட்சுமி, தலைமை கணக்கர் அம்பலவாணன் உள்ளிட்ட பணியாளர்கள் உடன் இருந்தனர். இன்று காலை ஆன்மிகப் பயணம் திருச்செந்துாரில் இருந்து புறப்பட்டு பழமுதிற்சோலை, திருப்பரங்குன்றம், சுவாமிமலை, திருத்தணி மற்றும் பழனி ஆகிய படை வீடுகளில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து விட்டு வருகின்ற ஜூன் 10ம் தேதி ஊருக்கு திரும்புகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar