Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மண்பானையில் பூஜை பொருட்கள், 80 கி.மீ., ... கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயிலில் வருடாபிஷேகம் கோதைமங்கலம் பெரியாவுடையார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவாரம் இராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
தேவாரம் இராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2024
10:06

போடி; தேவாரம் ஸ்ரீரங்க வளநாடு தேவாங்கர் ஜாதி பொதுமைக்கு பாத்தியப்பட்ட ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது.

வேண்டியவருக்கு வேண்டிய வரம் தரும் வகையில் தேவாரத்தில் ஸ்ரீரங்க வளநாடு தேவாங்கர் ஜாதி பொதுமைக்கு பாத்தியப்பட்ட சவுடாம்பிகை அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாக விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கும்பாபிஷேக யாக குண்டல ஹோமம் நடைபெற்றது. புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை யாகசாலையில் வைத்து பூஜைகள் செய்தனர்.

கும்பாபிஷேகம் கோயில் செட்டுமை மோகன்ராஜன், பெரியதனம் மனோகரன் தலைமையில் நடந்தது. கோயில் நிர்வாகஸ்தர்கள், இளைஞர் அணி, மகளிர் அணி, விழாக் குழுவினர் முன்னிலை வகித்தனர். கும்பாபிஷேகத்தை ஒட்டி நேற்று காலை 6:25 மணி அளவில் சர்வ சாதகர் சிவசக்தி சண்முக சாஸ்திரிகள் முன்னிலை வகித்து கோபுர கலசங்களில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றினார். அதன் பின் இராமலிங்க சவுடாம்பிகை அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனின் தரிசனம் பெற்றனர்.

விழாவில் அனைத்து லோத்தேகார் வம்சம், அனைத்து முச்சள தவரு வம்சம், அனைத்து சித்து கொள்ளுதார் வம்சத்தினர், அமர்ஜோதி ஸ்டோர்ஸ் உரிமையாளர் ராஜா, ரெங்கையன் செட்டியார் நினைவு அறக்கட்டளை நிறுவனர் பழனியாண்டவர், அறம் சட்ட அலுவலக வழக்கறிஞர் நாகராஜன், பில்டிங் டாக்டர் கடை உரிமையாளர் சிவசுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar