Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருப்புக்கோட்டை மீனாட்சி ... நடுவீரப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடுவீரப்பட்டு திரவுபதியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் காமாட்சியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்; பக்தர்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
திருப்பூர் காமாட்சியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்; பக்தர்கள் குவிந்தனர்

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2024
10:06

திருப்பூர், திருப்பூர் ஷெரீப் காலனி வாய்க்கால் தோட்டம்,  ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

திருப்பூர் ஷெரீப் காலனி, வாய்க்கால் தோட்டம் பகுதியில், 24 மனை தெலுங்கு செட்டியார் திருமண மண்டப அறக்கட்டளைக்குச் சொந்தமான ஸ்ரீகாஞ்சி காமாட்சியம்மன் கோவில் உள்ளது. கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மூலவர் சன்னதி கோபுரம் முழுமையாக தங்க முலாம் பூசி சீரமைக்கப்பட்டுள்ளது. நீரூற்று விநாயகர், கன்னிமூல கணபதி, சுப்ரமணியர் சன்னதி ஆகியனவும் அமைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழா கடந்த 6ம் தேதி காலை விநாயகர் வழிபாடு மற்றும் கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. அன்று மாலை வாஸ்து சாந்தி, பிரவேச பலி மற்றும் ேஹாமம் ஆகியன நடந்தது. மாலை முளைப்பாலிகை ஊர்வலம் மற்றும் திருவாபரண ஊர்வலம் நடந்தது.

கடந்த 7ம் தேதி காலை தனபூஜை, கோ பூஜை, மகாலட்சுமி ேஹாமம்; மாலை 5:00 மணிக்கு  முளைப்பாலிகை, காப்பு கட்டு நிகழ்ச்சியும் அதையடுத்து, முதல்கால யாக சாலை  பூஜைகளும் நடந்தது.நேற்று முன்தினம் இரண்டாம் கால யாக பூஜையும், கோபுர கலச ஸ்தாபிதமும் நடந்தது. தொடர்ந்து, அஷ்டபந்தனம், மூன்றாம் கால யாக பூஜை, மகா பூர்ணாகுதி ஆகியன நடந்தன.நேற்று காலை கோவில் மஹா கும்பாபிேஷக விழா அதிகாலை 5:00 மணிக்கு விநாயகர் வழிபாடு மற்றும் நான்காம் கால யாக பூஜைகளுடன் துவங்கியது.  யாக சாலையிலிருந்து தீர்த்தக் குடங்கள் புறப்பட்டு, ஸ்ரீகாஞ்சி காமாட்சியம்மன் தங்க விமான கோபுர கும்பாபிஷேகம் நடந்தது. பரிவாரமூர்த்திகள் சன்னதிகளில் கும்பாபிேஷகம் நடந்தது. கோபுர கலசங்கள் மீது புனித தீர்த்தம் ஊற்றி, தீபாராதனை நடந்தது. இதையடுத்து சிறப்பு அபிஷேகம், அலங்காரம்  மற்றும் மகா தீபாராதனை நடந்தது. கும்பாபிேஷகத்தை  அவிநாசி சிவஞான சிவாச்சாரியார், சங்கர நாராயண சிவாச்சாரியார், ராஜலிங்க சிவாச்சாரியார் குழுவினர் நடத்தினர்.கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை திருமண மண்டப அறக்கட்டளை தலைவர் கிருஷ்ணகுமார்  தலைமையில், அறக்கட்டளை மற்றும் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar