Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ... அரும்பாக்கம் பாஞ்சாலி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா அரும்பாக்கம் பாஞ்சாலி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா : ஜூன் 15ல் நடைசாத்தல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா : ஜூன் 15ல் நடைசாத்தல்

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2024
05:06

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா நடக்க உள்ளதால், ஜூன் 15ல் கோயில் நடை சாத்தப்படும் என கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் தெரிவித்தார்.

ராமாயண வரலாற்றில் இலங்கையில் ராவணனை வதம் செய்து சீதையை மீட்டு வந்த ராமபிரானுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட ராமேஸ்வரம் கடற்கரை மணலில் சீதை சிவலிங்கம் வடிவமைத்தது, அனைவரும் தரிசனம் செய்தனர். இதுவே ராமநாதசுவாமி கோயில் உருவான வரலாறு ஆகும். இந்நிலையில் இக்கோயிலின் தல வரலாறு குறித்து பக்தர்களுக்கு நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா கொண்டாடுவர். அதன்படி இந்தாண்டு ஜூன் 14 ல் ராமலிங்க பிரதிஷ்டை விழா துவங்குகிறது. அன்று மாலை ராவணன் வதம் செய்தல், ஜூன் 15ல் தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோயிலில் ராவணன் தம்பி விபீஷணருக்கு பட்டாபிஷேகம் சூட்டுதல், ஜூன் 16ல் ராமலிங்க பிரதிஷ்டை விழா நடக்க உள்ளது. இதில் ஜூன் 15ல் ராமர், சீதை லட்சுமணர், அனுமான் கோயில் இருந்து புறப்பாடாகி கோதண்ட ராமர் கோயிலுக்கு சென்று திரும்புவதால், அன்று அதிகாலை 3 மணி முதல் 3 :30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடக்கும். இதனைதொடர்ந்து கால, சாயரட்ச பூஜைகள் முடிந்தவுடன் காலை 7 மணிக்கு முதல் மாலை 5 மணி வரை கோயில் நடை சாத்தப்படும். பின் மாலை 5 மணிக்கு ராமர் திரும்பியதும் கோயில் நடை திறந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் இணை ஆணையர் தெரிவித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு, ஏலக்காய், வெட்டிவேர், உலர் திராட்சை, ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
சென்னை; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழக முதல்வர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் கொட்டும் மழையில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவையொட்டி வீதியுலா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar