திருப்பதியில் அயோத்தியா கண்ட அகண்ட பாராயணம்; பக்தர்கள் பரவசம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூன் 2024 12:06
திருப்பதி; திருமலையில் உள்ள நடநீராஜனம் மேடையில் இன்று காலை அயோத்தியா கண்ட அகண்ட பாராயணம் நடைபெற்றது.
திருமலையில் உள்ள நடநீராஜனம் மேடையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற அயோத்தியாகண்ட அகண்ட பாராயணத்தின் 11-வது அத்தியாயம் பக்தர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. இதில் அயோத்யாகாண்டத்தின் 40 முதல் 44 வது சர்கா வரை நான்கு சர்காக்களில் மொத்தம் 159 ஸ்லோகங்கள், யோகவாசிஷ்டம் மற்றும் தன்வந்திரி மஹாமந்திரத்தின் 25 ஸ்லோகங்கள் என மொத்தம் 184 ஸ்லோகங்கள் பாராயணம் செய்யப்பட்டது. அகண்ட பாராயணத்தில் தர்மகிரி வேத பள்ளி ஆசிரியர்கள், எஸ்.வி.வேத பல்கலை, எஸ்.வி., உயர்கல்வி பல்கலை வேத ஓதுபவர்கள், தேசிய சமஸ்கிருத பல்கலை அறிவியல் அறிஞர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், அன்னமாச்சார்யா திட்டக் கலைஞர்கள் ஸ்ரீ ஸ்ரீநிவாஸ் குழுவினர் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் "ஸ்ரீராம நீனமா மேமிருச்சிரா ஓரமா நீனமா மெண்டருச்சிரா..." என்ற கீர்த்தனையையும், "ராம ராம யணரதா ரகுபதி, ரக்ஷகூட தினதி வினதாதா..." என்ற கீர்த்தனையையும் பாடினர். இந்நிகழ்ச்சியில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், அறிஞர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். SVBC நிகழ்ச்சியை காலை 7 மணி முதல் 9 மணி வரை நேரடியாக ஒளிபரப்பியது.