Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி ஆதிபீட பரமேஸ்வரி ... கரிய காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் கரிய காளியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேட்டுப்பாளையம் சீதாராமர் கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
மேட்டுப்பாளையம் சீதாராமர் கோவிலில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2024
04:06

மேட்டுப்பாளையம்; நடூரில் புதிதாக கட்டிய சீதாாராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் நடூர், கண்ணப்பன் லே அவுட்டில், சீதாராமர் பஜனை மடம் செயல்பட்டு வந்தது. 137 ஆண்டுகள் பாரம்பரிய மடம், சீதாராமர் கோவிலாக மாற்றி கட்டப்பட்டது. இந்த கோவில் கருவறையில், ராமர், சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர், ஆகிய மூலவர் சுவாமி சிலைகள் பதிக்கப்பட்டுள்ளன. இக்கோவில் கும்பாபிஷேக விழா, 11ம் தேதி துவங்கியது. மதியம் கோதண்ட ராமர் பஜனை கோவில் இருந்து, பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். கோவிலில் அங்குரார்ப்பணம், கும்ப ஆவாகணம், ஹோமம், திவ்ய பிரபந்தம், சாற்று முறை, விமான கலசம் ஸ்தம்பிதம், சுவாமி சிலைகள் பிரதிஷ்டை ஆகியவை செய்யப்பட்டன. இன்று காலை வேத பாராயணம், திவ்யப்பிரபந்தம், யாத்ராதானம் ஆகியவை நடந்தது. 9:00 லிருந்து, 10 மணி வரை யாகசாலையில் இருந்து, தீர்த்தக் கலசங்கள் எடுத்துச் சென்று, கோபுர கலசத்திற்கும், சுவாமிகள் மீதும், காரமடை அரங்கநாதர் கோவில் ஸ்தலத்தார் வேதவியாச சுதர்சன பட்டர் தலைமையில், ஹரிகிருஷ்ண சுவாமி புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். மதியம் அலங்கார பூஜையும், அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்திருவிழா  நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான அங்காள பரமேஸ்வரி குருநாத ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar