Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேட்டுப்பாளையம் சீதாராமர் கோவிலில் ... முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரிய காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கரிய காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2024
04:06

பல்லடம்; பல்லடம் அருகே, கரிய காளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

பல்லடம் அடுத்த, சாமளாபுரம் பேரூராட்சி காளிபாளையம் கிராமத்தில், பழமையான ஸ்ரீகரிய காளியம்மன் கோவில் உள்ளது. பல ஆண்டுக்குப் பின், இக்கோவில் திருப்பணி துவங்கி, இன்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. முன்னதாக, ஜூன் 9 அன்று கிராம சாந்தியுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. மறுநாள், மகா கணபதி ஹோமம், நவக்கிரகம், மகாலட்சுமி ஓமங்கள் நடந்தன. சாமளாபுரம் சோளீஸ்வரர் கோவிலில் இருந்து முளைப்பாளிகை, மற்றும் தீர்த்தம் எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து, கங்கணம் கட்டுதல், காலா கர்ஷனம், முதல் கால யாக பூஜை உள்ளிட்டவை நடந்தன. நேற்று இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜையை தொடர்ந்து, சிவகிரி ஆதீனம் அருளாசி வழங்கினார். இதையடுத்து, இரவு 9.00 மணிக்கு மருந்து சாற்றுதல் நிகழ்வு நடந்தது. நேற்று காலை, நான்காம் காலை ஆக பூஜையை தொடர்ந்து, யாகசாலையில் இருந்து தீர்த்த கலசங்கள் புறப்பட்டன. காலை, 9.30 மணிக்கு கரிய காளியம்மன் கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து, விநாயகர், வீரமாத்தி அம்மன், கன்னிமார், கருப்பராயன், பட்டத்தரசி அம்மன் மற்றும் மாட்டைய கவுண்டர் ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. சிவகிரி ஆதீன, 75வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீபாலமுருக ஈசான சிவசமய பண்டித குரு சுவாமிகள் கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தபின் கரிய காளியம்மனை தரிசித்தனர். விழா குழு சார்பில், பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar