Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மஞ்சன மாரியம்மன் கோயில் ... மகா மாரியம்மன் கோவில் ஆண்டு விழா மகா மாரியம்மன் கோவில் ஆண்டு விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கடையூர் அமிர்த நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
திருக்கடையூர் அமிர்த நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2024
05:06

மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான அமிர்த வள்ளி தாயார் சமேத அமிர்த நாராயண பெருமாள் கோவில் உள்ளது. அபிராமி அம்மை தோன்றுவதற்கும், தேவர்களுக்கு அமிர்தம் பெறுவதற்கும் காரணமான விஷ்ணு பகவான் இத்தலஸத்தில் அமிர்த நாராயணப் பெருமாளாக அருள்பாலிக்கிறார். கர்ப்பிணிகள் அமிர்தவல்லி தாயாரை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். 


ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் சிதிலமடைந்து புகர்மண்டி காணப்பட்ட நிலையில் பாலாலம் செய்யப்பட்டு திருப்பணிகள் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக  நடைபெற்று பழமை மாறாமல் கோவில் கட்டி முடிக்கப்பட்டு இன்று ககும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய  கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து  விமானத்தை அடைந்தது  தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத  மங்கள வாத்தியங்கள் முழங்க தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரம்மாச்சாரியார் சுவாமிகள், மன்னார்குடி, செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் முன்னிலையில் விமான கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.  கும்பாபிஷேகத்தில் பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன், இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள்  உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டவாறு தரிசனம் செய்தனர். தொடர்ந்து பெருமாள் தாயார் திருக்கல்யாணமும், வீதி உலா காட்சியும் நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார் ; கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் மகா சனிப்பிரதோஷத்தை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவம் வரும் 21ம் தேதி காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆதியோகி மற்றும் 63 தேர்களுடன் பாதயாத்திரையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar