Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் ஆந்திர முதல்வர் ... வஞ்சிநகரம் சித்திவிநாயகர், வஞ்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வஞ்சிநகரம் சித்திவிநாயகர், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநெல்வேலி நெல்லையப்பர் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
திருநெல்வேலி நெல்லையப்பர் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2024
12:06

திருநெல்வேலி:நெல்லையில் உள்ள பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அதிகாலையில் நடந்த கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்ட திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தமிழகத்தின் முக்கிய சிவாலயங்களில் ஒன்றான, நெல்லையப்பர் கோவிலின் தேரோட்டம், வரும் 21ம் தேதி நடக்கிறது. அதன் முன்னோட்டமாக, ஆனி தேர்த்திருவிழா கொடியேற்றம், இன்று நடந்தது. திருவிழாவின் தொடக்கமாக இன்று அதிகாலை 3 மணிக்கு திருக்கோவில் நடைதிறக்கப்பட்டு விஸ்வரூபம் காலை சந்தி பூஜைகள் நடைபெற்றது. கொடிமரம் அருகில் அஸ்திர தேவா் மற்றும் கலசங்களுக்கும் மகா மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளயாகசாலையில் ஹோமங்களுடன் பூஜைகள் நடைபெற்றது . சுவாமி அம்பாள் ஆலய பிரதான கொடிமரத்திற்கு அருகில் ஏழுந்தருள கொடிப்பட்டத்திற்கு பூஜைகள் நடைபெற்று  காலை 04.30 மணிக்கு மேல் 05.30 க்குள் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. தொடா்ந்து கொடிமரத்திற்கு  16 வகை  பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வேத விற்பனா்கள் நான்கு வேதம் கூற ஓதுவாமூர்த்திகள் பஞ்சபுராணம் பாட கொடிமரத்திற்கு நட்சத்திர ஆரத்தி கோபுர ஆரத்தி சோடச உபசாரனைகள் நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  10 நாட்கள் நடைபெறும் இத் திருவிழாவில் தினமும் சுவாமி அம்பாள் காலை மாலை ஆகிய இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் ஏழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி கொடுத்து ரதவீதிகளில் வீதிஉலா  நடைபெறும். கோயில் கலையரங்கத்தில் தினமும் மாலை சமயச்சொற்பொழிவு,கர்நாடக இன்னிசை, ஆன்மீகக் கருத்தரங்கம், பக்தி இன்னிசைக்கச்சேரி,புராண நாடகம், என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். சிகர நிகழ்ச்சியான ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட பெரிய தேரான நெல்லையப்பர் தேர் உட்பட 5 தேர் ஓடும் திருத்தேரோட்டம் வரும் 21ம் தேதி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar