Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஆனி பவுர்ணமி; மதுக்கரை ... திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முப்பழ பூஜை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரியில் ஆனி பவுர்ணமி வழிபாடு; திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
சதுரகிரியில் ஆனி பவுர்ணமி வழிபாடு; திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2024
03:06

வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இன்று அதிகாலை முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் குவிந்திருந்தனர். காலை 6:00 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். பிளாஸ்டிக் மற்றும் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்கின்றனரா என வனத்துறையினர் சோதனை செய்த பிறகு பக்தர்களை அனுப்பினர். வெயிலின் தாக்கம் குறைந்து பக்தர்கள் மலையேற இதமான சூழல் நிலவியது. மதியம் 12:00 மணி வரை சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலை ஏறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர். கோயிலில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பவுர்ணமி வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது. மலையில் கோயில் சார்பிலும், அடிவாரத்தில் தனியார் மடங்கள் சார்பிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வத்ராயிருப்பு, பேரையூர் தாலுகா போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பில் இருந்து அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar