Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பேசும் பெருமாள் கோவில் ... பவுர்ணமி பூஜை : புஷ்ப பாவாடையில் பாகம்பிரியாள் அம்பாள் பவுர்ணமி பூஜை : புஷ்ப பாவாடையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேலநெட்டூர் சொர்ண வாரீஸ்வரர் கோயில் ஆனி பிரம்மோற்ஸவ தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மேலநெட்டூர் சொர்ண வாரீஸ்வரர் கோயில் ஆனி பிரம்மோற்ஸவ தேரோட்டம்

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2024
11:06

மானாமதுரை; மானாமதுரை அருகே உள்ள மேலநெட்டூர் ,சாந்தநாயகி அம்மன் சமேத சொர்ணவாரீஸ்வரர் கோயிலில் ஆனி பிரம்மோற்ஸவ தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கொடியேற்றத்துடன் துவங்கியது.

சிவகங்கை சமஸ்தானம்,தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட மேலநெட்டூர் சொர்ணவாரீஸ்வரர் சாந்தநாயகி அம்மன் கோயிலில் வருடந்தோறும் ஆனித்திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் போது சுவாமிகள் சிம்மம்,கமலம்,அன்னம்,யானை,குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சர்வ அலங்காரங்களுடன் மண்டகப்படிகளுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடைபெற்றதை தொடர்ந்து சுவாமிகள் சர்வ அலங்காரங்களுடன் திருக்கல்யாண மேடைக்கு எழுந்தருளிய பின்னர் அர்ச்சகர்கள் ஹோமங்கள் வளர்த்து பூஜைகளை செய்த பின்பு திருக்கல்யாணம் நடைபெற்றது.இதனை தொடர்ந்து நேற்று சொர்ணவாரீர்ஸ்வரர் சுவாமிகள் தேரோட்டத்திற்காக பெரிய தேரில் எழுந்தருளினார்.பின்னால் சிறிய தேரில் சாந்தநாயகி அம்மனும் முன்னாள் விநாயகர் மற்றும் முருகன் சுவாமியும் எழுந்தருளிய பிறகு மாலை 4:30 மணிக்கு தேர்கள் நிலையிலிருந்து கிளம்பி நான்கு ரத வீதிகளின் வழியே வலம் வந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் சுவாமிகளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.பின்னர் தேர் மாலை 5:45 மணிக்கு நிலையை அடைந்தது.அதனைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. தேரோட்ட விழாவில் மேலநெட்டூர் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் செல்லப்பா, தேவஸ்தான மேலாளர் இளங்கோ,கண்காணிப்பாளர் சீனிவாசன் மற்றும் மேலநெட்டூர், வேலடிமடை கிராம மக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar