Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்துாரில் லட்சக்கணக்கான ... மத நல்லிணக்கத்திற்காக 22 ஆண்டுகளுக்குப் பின் கந்தூரி திருவிழா மத நல்லிணக்கத்திற்காக 22 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தில் மெகா அன்னதானம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தில் மெகா அன்னதானம்

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2024
03:06

திருநெல்வேலி; நெல்லை காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் கோயிலில் ஆனித் தேரோட்டம் நேற்று நடந்தது. தேரோட்ட திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்றவர்களுக்கு ரதவீதிகள், வீடுகள், திருமண மண்டபம் என பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டாலும், நெல்லை டவுன்பாரதியார் தெரு லிட்டில்பிளவர் மேல்நிலைப்பள்ளியில் மெகா அன்னதானம் வழங்கப்பட்டது. நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கைங்கர்ய டிரஸ்ட் மற்றும் பக்தர்கள் பேரவை சார்பில் நடந்த அன்னதான நிகழ்ச்சியை செங்கோல் ஆதீனம் குருமகா சன்னிதானம், தருமபுரம் தம்பிரான் சுவாமிகள், ராமகிருஷ்ண தபோவனம் குற்றாலம் அகிலானந்தசுவாமிகள் ஆகியோர் துவக்கி வைத்தனர். காலை 6.15 மணிக்கு துவங்கிய அன்னதான நிகழ்ச்சி இரவு 6.30 மணி வரைநீடித்தது. அன்னதான நிகழ்ச்சியில் 68 ஆயிரம்பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதான நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற லிட்டில் பிளவர் பள்ளி தாளாளர் மரியசூசை இடத்தை தொடர்ச்சியாக வழங்கிவருவதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. 1100 தன்னார்வ தொண்டர்கள் பணியாற்றினர். காலையில் பொங்கல், சட்னி, சம்பார், கேசரி ஆகியவையும், தொடர்ந்து சாதம், சம்பார், அவியல், கூட்டு, ரசம், பச்சடி, உருளைக்கிழங்கு குருமா, சர்க்கரைபொங்கல், மோர் உள்ளிட்ட உணவு மொத்தம் என ௬௮ ஆயிரம்பேருக்கு உணவு வழங்கப்பட்டது. இதில் லிட்டில் பிளவர் பள்ளி தாளாளர் மரியசூசை, டி.டி.கே.சிதம்பரம், காசிவிஸ்வநாதன், இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் குணசீலன், குணத்துரை, ஆறுமுகநயினார், சுப்பிரமணியன், பரமசிவன், சுப்பிரமணியன், ராஜகோபால், பெருமாள், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் சீனிவாசன், கமலேஸ்வரன்உட்படபலர் கலந்து கொண்டு முன்னேற்பாடுகளை செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: அட்டுக்கல்லில் உள்ள கருப்பராயன் கோயிலில், சுவாமி அழைத்தல் நேற்று நடந்தது.அட்டுக்கல், ... மேலும்
 
temple news
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி 2ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar