Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அயோத்தி ராமர் கோயில் தலைமை ... திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிராம ஒற்றுமைக்காக நடத்தப்படும் புரவி எடுப்பு திருவிழா; மானாமதுரையில் குவியும் ஆர்டர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கிராம ஒற்றுமைக்காக நடத்தப்படும் புரவி எடுப்பு திருவிழா; மானாமதுரையில் குவியும் ஆர்டர்கள்

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2024
12:06

மானாமதுரை; தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும்,கிராம ஒற்றுமைக்காகவும் புரவி எடுப்பு திருவிழாக்கள் நடைபெற உள்ளதால் மானாமதுரையில் புரவிகள் செய்வதற்கு ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.

தமிழகத்தின் தென் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல்,மதுரை,ராமநாதபுரம், சிவகங்கை,விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஜூன்,ஜூலை,ஆகஸ்ட் மாதங்களில் கிராமங்களில் உள்ள காவல் தெய்வங்களை வேண்டி நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும்,கிராம மக்களின் ஒற்றுமைக்காகவும் புரவி எடுப்பு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். தற்போது தென் மாவட்டங்களில் புரவி எடுப்பு திருவிழாக்கள் ஆரம்பமானதை தொடர்ந்து மானாமதுரையில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்களிடம் ஏராளமான கிராம மக்கள் புரவிகள் செய்வதற்கு ஆர்டர்கள் கொடுத்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து ஏராளமான மண்பாண்ட தொழிலாளர்கள் புரவிகள்,மாடு,சுவாமி சிலைகள்,மனித உருவங்கள் ஆகியவற்றை மும்முரமாக தயார் செய்து வருகின்றனர்.இது குறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் சிலர் கூறியதாவது, தென் மாவட்டங்களில் வழக்கம் போல் ஜூன்,ஜூலை,ஆகஸ்ட் மாதங்களில் ஏராளமான புரவி எடுப்பு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.அதன்படி இந்த ஆண்டுக்கான புரவி எடுப்பு திருவிழாக்கள் ஆரம்பமானதை தொடர்ந்து ஏராளமான கிராமங்களை சேர்ந்தவர்கள் புரவிகள் செய்வதற்கு ஆர்டர்கள் கொடுத்துள்ளனர் இதையடுத்து நாங்களும் பயபக்தியோடு விரதம் இருந்து புரவிகளை தயார் செய்து வருகிறோம். ஒரு புரவி செய்வதற்கு ரூ.8 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரம் வரை செலவாகி வருகிறது. நாங்கள் தயார் செய்து வைத்துள்ள புரவிகளை கிராம மக்கள் ஒற்றுமையாக ஒன்று கூடி உறவினர்களோடு வந்து புரவிகளுக்கு பூஜைகளை செய்து மானாமதுரைக்கு அருகில் உள்ள ஊர்களைச் சேர்ந்தவர்கள் தலைச்சுமையாகவே தங்களது ஊர்களுக்கு கொண்டு சென்று காவல் தெய்வங்களுக்கு படைத்து வருகின்றனர்.தொலைவில் உள்ள ஊர்களை சேர்ந்தவர்கள் சரக்கு வாகனங்களில் கொண்டு சென்று வருகின்றனர். தற்போது மானாமதுரை அருகே ஏ.விளாக்குளம் கிராமத்தில் நாளை நடைபெற உள்ள புரவி எடுப்பு திருவிழாவிற்காக புரவிகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar