சாத்தனூர் மகா சாத்தையனார் கோயில் கும்பாபிஷேக விழா; யாக சாலை, கோ பூஜைகள் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூலை 2024 03:07
இளையான்குடி; இளையான்குடி சாலைக்கிராமம் அருகே உள்ள சாத்தனூர் மகா சாத்தையனார் கோயிலில் கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ள நிலையில் யாக சாலை,கோ பூஜைகள் துவங்கின.
இளையான்குடி சாலைக்கிராமம் அருகே சாத்தனூரில் மிகவும் பிரசித்தி பெற்ற மகா சாத்தையனார் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கும்பாபிஷேக விழாவிற்காக திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் பணிகள் முடிவு பெற்றதை தொடர்ந்து ஜூலை., 3ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு இன்று காலை கணபதி ஹோமத்துடன் முதலாம் கால யாகசாலை பூஜைகள் மற்றும் கோ பூஜைகள் துவங்கின.இதனைத் தொடர்ந்து தொடர்ந்து 4கால பூஜைகள் நடைபெற்று 3ம் தேதி காலை 10:00 மணியிலிருந்து 10:30 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை சாத்தனூர் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.