Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் ஓரிக்கையில் சைவ ... அரசு வேலை கிடைக்க வேண்டுமா? தொம்லுார் சூரிய நாராயணா கோவில் வாங்க..! அரசு வேலை கிடைக்க வேண்டுமா? ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனந்தபத்மநாபாவுக்கு பிடித்த வாழைப்பழம் காணிக்கை; தரிசித்தால் வாழ்க்கை சந்தோஷமாக அமையும்
எழுத்தின் அளவு:
அனந்தபத்மநாபாவுக்கு பிடித்த வாழைப்பழம் காணிக்கை; தரிசித்தால் வாழ்க்கை சந்தோஷமாக அமையும்

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2024
01:07

உடுப்பி மாவட்டம், பெர்துாரில் 800 ஆண்டுகால பழமையான அனந்த பத்மநாபா கோவில் அமைந்துள்ளது.


புராணங்கள்படி, முன்னொரு காலத்தில் கிருஷ்ண வர்மா என்ற பிராமணர், தினமும் அனந்தேஸ்வர தேவியை தரிசனம் செய்ய செல்வார். ஒரு நாள் அவரது கனவில், கடவுள் தோன்றி உபதேசம் செய்தார். உறக்கத்தில் இருந்து எழுந்த அவர், தனது குருவான க்ருத்ரதனாடே சுவாமியிடம் விபரத்தை கூறினார். சீடனின் பேச்சை கேட்ட குரு, சிலை வடிவமைக்க பாறையை தேடி கண்டுபிடித்தார். தனது சீடர்களிடம் கூறி, கற்களை சுமந்து கொண்டு நடந்து சென்றனர். சீடர்கள் அனைவரும் பசியுடன் இருப்பதை உணர்ந்தார். அந்நேரத்தில் வாழைப்பழம் வியாபாரி ஒருவர், வாழைப்பழத்துடன் அவ்வழியாக வந்தார். அவரை நிறுத்திய சுவாமிகள், பழம் கேட்டார். அதற்கு அந்த வியாபாரி, பழங்களை சந்தைக்கு கொண்டு செல்வதாக கூறினார். இவ்வாறு கூறிய சில நொடிகளில், திடீரென அவரது பழக்கூடை பாரமானது. பாரத்தை தாங்க முடியாமல், வியாபாரி கீழே விழுந்தார். தனது தவறை உணர்ந்த வியாபாரி, சுவாமிகள் கூறியபடி, சீடர்களுக்கு பழத்தை வழங்கினார். இங்கு லட்சுமி ஜனார்த்தன விக்ரஹம் இருந்தாலும், சிலையின் கீழ், நாகப்பாம்பு இருப்பதால், அனந்த பத்மநாபா என்றே அழைக்கின்றனர்.


இக்கோவிலில் ஆண்டு விழா, ராமநவமி, நாக பஞ்சமி, விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி, விஜயதசாமி என விழாக்கள் நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் நடக்கும் தேர் திருவிழாவின் போது, சுருளே வம்சத்து மன்னர்கள், ஏழு நாட்கள் கோவிலில் தங்கி, தரிசனம் செய்வர். கோவிலின் வடக்கு பகுதியில் பத்மா தெப்பகுளம் உள்ளது. சுவாமிக்கு அனைத்து சேவைகளையும் விட, வாழைப்பழம் சமர்ப்பிப்பது மிகவும் முக்கியம். புதுமண தம்பதியர் இங்கு வந்து தரிசித்தால், வாழ்க்கை சந்தோஷமாக அமையும் என்றும் நம்பப்படுகிறது. – நமது நிருபர் –

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை(அக்.,20) மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்ககவசமும், வைரக்கிரீடமும் ... மேலும்
 
temple news
 பழநி: பழநி முருகன் கோயிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இங்குள்ள ஆனந்த ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல் சாந்தியாக, திருச்சூரை சேர்ந்த பிரசாத் தேர்வு ... மேலும்
 
temple news
நத்தம்: சிவன் கோயில்களில் நடந்த சனி பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar