Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலை முதல் காட் ரோட்டில் தீ ... காரமடை அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி வழிபாடு; வெள்ளி சப்பரத்தில் பெருமாள் வலம் காரமடை அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் ஆக.22ல் கும்பாபிஷேகம்; வரும் 7ல் முகூர்த்தக்கால்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் ஆக.22ல் கும்பாபிஷேகம்; வரும் 7ல் முகூர்த்தக்கால்

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2024
02:07

இளையான்குடி; இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயிலில் வருகிற ஆக.22ம் தேதி கும்பாபிஷேக விழாவும், வருகிற 7ம் தேதி முகூர்த்தக்கால் நடும் விழாவும் நடைபெற உள்ளது.


சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி மாதம் பொங்கல் விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் போது தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.இந்நிலையில் கடந்த சில வருடங்களாக கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது வருகிற ஆக.22ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.இதற்காக வருகிற 7ம் தேதி கோயிலில் முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கோயில் வளாகத்தில் பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் மற்றும் கோயில் பணியாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற கிராம கூட்டத்தில் கும்பாபிஷேக விழாவை சிறப்பாக நடத்துவது என்றும்,பக்தர்களுக்கு தேவையான வசதிகளை முழுமையாக செய்து கொடுப்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது மேலும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் நாளிலிருந்து கோயில் முன்பாக பக்தர்கள் ஆடு,கோழிகளை பலியிடுவதை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தாயமங்கலத்திற்கு சிறப்பு பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar