ஆனி திங்கள்; ஆதி கும்பேஸ்வரருக்கு சிறப்பு பூஜை.. மகா அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2024 10:07
கோவை; ராம் நகர் வி. என். தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் ஆனி மாதம் நான்காவது திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் இருக்கும் ஆதி கும்பேஸ்வரருக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. இதில் வெள்ளை நிற வஸ்திரத்தில் சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வில்வார்ச்சனை செய்து சிவ தரிசனம் செய்தனர்.