Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மேல்மலையனூருக்கு வந்த பக்தர்கள் பஸ் ... திருத்தணி முருகன் கோவில்களில் கந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரூ.1 கோடி நன்கொடை வழங்கினால் 20 ஆண்டு சிறப்பு தரிசனம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 நவ
2012
10:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, ஒரு கோடி ரூபாய் நன்கொடை செலுத்தினால், 20 ஆண்டு சிறப்பு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால், தரிசனத்துக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைத்து, வசதிகளை செய்து கொடுக்கும் பணியில் கோவில் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. கோவிலை மேம்படுத்த நன்கொடை பெறப்படும் நிலையில், நன்கொடை கொடுக்கும் நபர்களுக்கு, சிறப்பு தரிசன அனுமதியை அறிமுகப்படுத்தி உள்ளது. கோவிலில் தினம், ஆறு கால பூஜை செய்யப்படுகிறது. இந்த பூஜையில் சிரமமின்றி தரிசனம் செய்ய, ஒரு கோடி நன்கொடை செலுத்துபவர்களுக்கு, பிளாட்டின அட்டை வழங்கப்படும். இந்த அட்டை மூலம், 20 ஆண்டுகளுக்கு அவரது குடும்பத்தைச் சேர்ந்த, 10 பேர், ஒரு நாளைக்கு இரண்டு கால பூஜைகளில், தரிசனம் செய்ய முன்னுரிமை அளிக்கப்படும்.மேலும், ஏழு லட்சம் ரூபாய் நன்கொடை செலுத்துபவர்கள், 20 ஆண்டுகளுக்கு, அவரது குடும்பத்தைச் சேர்ந்த, ஏழு பேருக்கு, ஒரு நாளைக்கு இரண்டு கால பூஜை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும்.இந்த அட்டை வைத்திருப்பவர்கள், திருவண்ணாமலை கோவில் மட்டுமின்றி, இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான அனைத்து கோவில்களிலும், பூஜைகளில் கலந்து கொள்ள முன்னுரிமை அளிக்கப்படும் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar