Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரங்க மன்னார் கோயிலில் ஆடிப்பூர ... நிலச்சரிவுகளில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய காமாட்சியம்மன் கோவிலில் மோட்ச தீபம் நிலச்சரிவுகளில் உயிரிழந்தவர்களின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி பிரதோஷ வழிபாடு; ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி பிரதோஷ வழிபாடு; ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

பதிவு செய்த நாள்

01 ஆக
2024
02:08

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நேற்று அதிகாலை முதல் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் குவிந்தனர். இதனால் காலை 5:40 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். எளிதில் தீப்பற்றும் பொருட்களை பக்தர்கள் கொண்டு செல்கின்றனரா என வனத்துறையினர் பரிசோதனை செய்தனர். மதியம் 12 00 மணி வரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர். ஆனால், 12 மணியையும் கடந்து வந்த பக்தர்கள் மலையேற அனுமதிக்கபடததால் வனத்துறை கேட்முன்பு தவிப்புடன் காத்திருந்தனர். வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையிலும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மலையேறினர்.


கோயிலில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பிரதோஷ வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தனர். விருதுநகர், மதுரை மாவட்ட போலீசாரும், வத்திராயிருப்பு, சாப்டூர் வனத்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மலையில் கோயில் சார்பிலும், அடிவாரத்தில் தனியார் அன்னதான மடங்கள் சார்பிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மருத்துவ குழுவினர், தீயணைப்பு துறையினர், தயார் நிலையில் இருந்தனர்.‌ மதுரை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் மேலும் பல இடங்களில் கூடுதல் தண்ணீர் தொட்டிகள் வைத்து, அதில் எந்நேரமும் குடிநீர் இருப்பதையும், தற்காலிக பஸ் ஸ்டாண்டில் நிழற் பந்தல்கள் அமைக்கவும், போதிய அளவில் சுகாதார வளாகம் அமைக்கப்பட வேண்டும் என்பதும் பக்தர்களின் வேண்டுகோளாகும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar