Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி முருகன் கோவிலில் அலகு ... திருநெல்வேலி காந்திமதி அம்பாள் மடியில் முளைகட்டிய தானியங்கள் நிரப்பி பூஜை; 1 லட்சத்து 8 வளையல் அலங்காரம் திருநெல்வேலி காந்திமதி அம்பாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை, பொள்ளாச்சி கோவில்களில் ஆடிப்பூரம் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
உடுமலை, பொள்ளாச்சி கோவில்களில் ஆடிப்பூரம் திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

08 ஆக
2024
10:08

உடுமலை அருகே குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில், ஆடிப்பூரம் விழா நான்கு நாட்களாக நடந்தது. நேற்று, காலை, 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் துவங்கியது. காலை, 8:00 மணிக்கு ஆண்டாள் நாச்சியார் பூமிலட்சுமி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, திருக்கல்யாண சிறப்பு ேஹாமம் நடந்தது. கோவில் வளாகத்தில், சிறப்பு அலங்காரத்தில், ஆண்டாள் நாச்சியார் ரங்கமன்னார் சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபவம், வேத மந்திரங்கள் முழங்க துவங்கியது. புண்யகாவாசம், காப்பு கட்டுதல், காசிக்குச்செல்லுதல், சுவாமிகளுக்கு பூநுால் அணிதல் உள்ளிட்ட திருமண நிகழ்வுகள் நடந்தன. சுவாமிகளுக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. மதியம், 12:00 மணிக்கு, பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, சுவாமிக்கு திருமாங்கல்ய தாரணம் நடந்தது. ஆண்டாள் நாச்சியார் சமேத ரங்கமன்னார் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தொடர்ந்து, பூப்பந்து விளையாட்டு, தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு மங்கள கயிறு வழங்கப்பட்டது. மாலையில், சிறப்பு அலங்காரத்துடன் ஆண்டாள் நாச்சியார் ரங்கமன்னார் சுவாமிகளின் திருவீதி உலா நடந்தது.


* மாரியம்மன் கோவிலில், அம்பாளுக்கு அபிேஷக ஆராதனை நடந்தது. நேரு வீதி காமாட்சியம்மன் கோவிலில், ஊஞ்சல் உற்சவத்தில், அம்மனுக்கு வளையல் அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடந்தது.


* பொள்ளாச்சி கடைவீதி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு நேற்று காலை, 6:00 மணிக்கு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


* டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில், ஆண்டாளின் திருநட்சத்திரமான திருவடிபூரத்தையொட்டி ஆண்டாள் நாச்சியாருக்கு காலை, 9:00 மணிக்கு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, நாச்சியார் திருப்பாவை மற்றும் திருப்பாவை சேவித்தல் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 5:00 மணிக்கு ரங்க மன்னார், ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


*பொள்ளாச்சி எல்.ஐ.ஜி., காலனி விஸ்வகர்மா காமாட்சி அம்மன் கோவிலில், நேற்று மாலை விஸ்வகர்மா காமாட்சி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. தொடர்ந்து, மகா தீபாராதனை நடந்தது. இதேபோன்று, பொள்ளாச்சி, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar