Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை, பொள்ளாச்சி கோவில்களில் ... துாத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் புஷ்பாஞ்சலி துாத்துக்குடி தெப்பக்குளம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநெல்வேலி காந்திமதி அம்பாள் மடியில் முளைகட்டிய தானியங்கள் நிரப்பி பூஜை; 1 லட்சத்து 8 வளையல் அலங்காரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருநெல்வேலி காந்திமதி அம்பாள் மடியில் முளைகட்டிய தானியங்கள் நிரப்பி பூஜை; 1 லட்சத்து 8 வளையல் அலங்காரம்

பதிவு செய்த நாள்

08 ஆக
2024
11:08

திருநெல்வேலி; நெல்லையப்பர் கோயில் ஆடிப்பூர முளைகட்டுத் திருவிழா கோலாகலமாக நடந்தது. நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 29ம் தேதி காலை துவங்கியது. 4ம் திருநாளான 1ம் தேதி காலை காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம், இரவு அம்பாள் வீதிஉலா நடந்தது. 


9ம் நாளான நேற்று முன்தினம் காலை செப்புத் தேரில் அம்பாள் பவனி நடந்தது. 10ம் திருவிழாவான நேற்று காலை அம்பாள், அஸ்திரதேவிக்கு பொற்றாமரை குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து மாலைஅம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் நடந்த ஆடிப்பூர முளைக்கட்டு திருவிழாவை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்பாளுக்கு 1 லட்சத்து 8 வளையல்கள் சாத்தப்பட்டு, மடியில் முளைகட்டிய தானியங்கள், பட்சணங்களை நிரப்பி சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. இதனையடுத்து அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி சுவாமி சன்னதி உற்சவமண்டபத்திற்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. முளைகட்டிய தானியங்கள், பட்சணங்கள், வளையல்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் நெல்லை மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 
temple news
 கோவை: கோட்டைமேடு பகுதியிலுள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், இன்று உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar