இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளி பெருந்திருவிழா துவக்கம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஆக 2024 11:08
சாத்துார்; சாத்துார் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் இன்று காலை 10:00 மணிக்கு ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
இருக்கன்குடி மாரியம்மன் கோயில் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். கோயிலில் தை மற்றும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமைகளில் பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம் வருகிறஆகஸ்ட்16ல் ஆடி கடைசி வெள்ளி பெருந்திருவிழா நடைபெறஉள்ளது. இதற்காக திருவிழா கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று நடந்தது. காசிவிஸ்வநாதபட்டர் தலைமையில் பட்டர்கள் கோயில் கொடி மரத்தில் திருவிழா கொடியை ஏற்றினர். பின்னர் சிறப்பு பூஜைகளுடன் தீபா ராதனை நடந்தது. கோயில் பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழுத் தலைவர் ராமமூர்த்தி பூஜாரி, செயல் அலுவலர் மற்றும் உதவி ஆணையர் (கூ.பொ) சுரேஷ், பரம்பரை பூஜாரிகள், இருக்கன்குடி, நத்தத்துபட்டி, கே.மேட்டுப்பட்டி, அப்பனேரி, என்.மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தமுக்கியபிரமுகர்கள் நாட்டாமைகள், ஊராட்சித் தலைவர்கள் விழாவில் கலந்து கொண்டனர். திருவிழா கொடி ஏற்றத்தைத் தொடர்ந்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெறும். ஆகஸ்ட் 16 மதியம் ஒரு மணி அளவில் சுவாமி ரிஷப வாகனத்தில் நகர்வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறும் விழாவிற்கானஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர். கொடியேற்றத்தை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். டி.எஸ்.பி. சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சாத்துாரில் இருந்து இருக்கன்குடிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.