Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆலத்துார் தாகப்பாடி அம்மன் கோவில் ...  அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்ஸவம் துவக்கம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு; ஆக., 24, 25ல் நடக்கிறது
எழுத்தின் அளவு:
பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு; ஆக., 24, 25ல் நடக்கிறது

பதிவு செய்த நாள்

15 ஆக
2024
05:08

பழநி; முருகப் பெருமானின் பெருமையை, உலகில் உள்ள முருக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், பழநியில் இந்த ஆண்டு அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஆக., 24, 25ல் பழநியில் நடைபெறுகிறது.

உலக நாடுகளில் திருமுருக வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. இந்தியா, இலங்கை, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மொரீசியஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, கனடா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் தனித்துவம் பெற்ற வழிபாடாகச் சிறந்து விளங்குகிறது. ஆகவே, உலக முருக பக்தர்களையும் சிந்தனையாளர்களையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை இம்மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது.முருகப்பெருமானை நக்கீரர், குமரகுருபரர், அருணகிரிநாதர் தொடங்கி வாரியார் வரை போற்றிய அருளாளர் பலர் உண்டு. முதன்முதலில் முருகனின் மேன்மை கண்ட பழந்தமிழர், இளமையும் அழகும் உடைய செம்பொருளாகக் கொண்டு வழிபட்ட மாண்பை ஆய்வு நோக்கில் நிறுவ முருக பக்தர்களை உலகளவில் ஒருங்கிணைத்து அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு – 2024 பழனியில் 24.08.2024 மற்றும் 25.8.2024 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

மாநாட்டின் குறிக்கோள்கள்

முருக வழிபாட்டின் உள்ளுறை நெறிகளை உலகெங்கிலும் பரப்புதல்.
முருகனை அடைவிக்கும் தத்துவக் கோட்பாடுகளை யாவரும் எளிமையாக அறிந்து அருளேற்றம் பெற உதவுதல்.மேன்மை பொலியும் முருகனடியார்களை உலகளாவிய அளவில் ஒருங்கிணைத்தல். முருக வழிபாட்டு நெறியை புராணங்கள், இலக்கியங்கள், திருமுறைகள், திருப்புகழ், சைவ சித்தாந்த சாத்திரங்கள் ஆகியவற்றில் இருந்து  ஆழ்ந்தெடுத்து அதன் முத்துக்களை உலகறிய பரப்புதல் ஆகும்.

தமிழக அரசின்  இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 24.08.2024 மற்றும் 25.8.2024 தேதிகளில் ஆறுபடைவீடுகளில் மூன்றாம் படைவீடான  பழனியில் நடைபெறவுள்ளது. இதில் உலகளாவிய சமய சான்றோர்கள், முக்கிய பிரமுகர்கள், தமிழ் அறிஞர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்விழாவில் பல்வேறு  அரங்குகள் அமைகின்றன. குறிப்பாக, விழாவில் கலைநிகழ் அரங்கம், ஆராய்ச்சிக் கட்டுரைகள் வாசிக்க  ஆய்வரங்கம், கந்தன்  புகழ் பேசும் கண்காட்சி,  மக்கள் அனைவரும் தாமே வழிபடும் வகையில்  வேல்கோட்டம் மற்றும் தமிழ்க்கடவுள் முருகனின்  பெருமைகளைப் பறைசாற்றும் வகையில்  மாநாடு  பந்தல் அமைக்கப்பட உள்ளது.

இம்மாநாட்டில் முருகனடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமயச்  சொற்பொழிவாளர், திருப்பணி மேற்கொண்டவர்கள், திருக்கோயிலுக்குத்  தொண்டு புரிந்தோர், ஆன்மிக இலக்கிய படைப்பாளிகள் ஆகிய பல்வேறு வகைகளில் சிறந்து விளங்கும் பெருமக்களுக்கு, முருக  வழிபாட்டுச் சான்றோர்  திருப்பெயரில் விருதுகள் வழங்கப்பெறும்.

தொடக்க விழா

தலைமை : ஐ.பெரியசாமி ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்

முன்னிலை; திரு. பி.கே.சேகர்பாபு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்
அர.சக்கரபாணி உணவுத் துறை அமைச்சர்
ஆர்.சச்சிதானந்தம் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர்
ஐ.பி.செந்தில் குமார் பழனி சட்டமன்ற உறுப்பினர்

சிறப்புரை
ஒய்.பி. டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன்
தொழில் முனைவோர் (பர் கூட்டுறவு துணை அமைச்சர், மலேசியா
திரு. செந்தில் தொண்டைமான்
அளுநர் கிழக்கு மாகாணம், இலங்கை
திரு. இளங்கோ கே.இளவழகன்
திரு. டி.எச்.பாப்பாராய்டு வேரமன்
இப்ஸ்விச் மேயர், இங்கிலாந்து மலேசிய சிலாங்கூர் மாநில செயற்குழு உறுப்பினர்
லெஸ் கவண்டர்
வி.பி.சண்முகம் மலாக்கா மாநில செயற்குழு உறுப்பினர்

நல்ஆசியுரை வழங்கும் ஆதீனங்கள்

சீர்வளர்சீர் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் திருவாவடுதுறை ஆதீனம்
சீர்வளர்சீர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் திருவண்ணாமலை ஆதீனம்
சீர்வளர்சீர் சாந்தலிங்க மருதாசல அடிகளார் பேரூர் ஆதீனம்
சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான சுவாமிகள் குருமகா சந்நிதானம், செங்கோல் ஆதீனம்
சீர்வளர்சீர் குமரகுருபர சுவாமிகள் சிரவை ஆதீனம்
சீர்வளர்சீர் சிவ சண்முக ஆறுமுகம் மெய்ஞான சிவாசாரியா சுவாமிகள்
திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீமத் ஞானியார் மடாலயம்
சீர்வளர்சீர் தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தருமபுரம் ஆதீனம்
சீர்வளர்சீர் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் மதுரை ஆதீனம்
சீர்வளர்சீர் சிவஞான பாலய சுவாமிகள் மயிலம் பொம்மபுர ஆதீனம்
சீர்வளர்சீர் காசிவாசி முத்துக்குமார சுவாமித் தம்பிரான் குருமகா சந்நிதானம், திருப்பனந்தாள் காசிமடம்
சீர்வளர்சீர் மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் சூரியனார்கோயில் ஆதீனம்
சீர்வளர்சீர் சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் வேளாக்குறிச்சி ஆதீனம்

முதல் நாள் நிகழ்ச்சி : 24.08.2024
திருவிளக்கு ஏற்றுதல்

நாதஸ்வர ரத்னா திருக்கோயிலூர் பாலாஜி நாதஸ்வர குழுவினர்
சங்கீத கலாநிதி பத்மஸ்ரீ கலைமாமணி வலையபட்டி ஏ.ஆர்.சுப்ரமணியம்
ஐ.பெரியசாமி மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்
ஆர்.சச்சிதானந்தம் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர்
ஐ.பி.செந்தில்குமார் அவர்கள் பழனி சட்டமன்ற உறுப்பினர்
முத்தமிழ் முருகன் மாநாடு தொடக்கம் பத்மஸ்ரீ, கலைமாமணி டாக்டர் சீர்காழி கோ. சிவசிதம்பரம்

வரவேற்புரை :
பி.சந்தரமோகன் இ.ஆ.ப., முதன்மை அரசுச் செயலர், சுற்றுலா, பண்பாடு (ம) அறநிலையங்கள் துறை
தொடக்கவுரை
 பி.கே.சேகர்பாபு மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்

ஆசியுரை :
சீர்வளர்சீர் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தருமபுர ஆதீனம் சீர்வளர்சீர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் திருவண்ணாமலை ஆதீனம் சீர்வளர்சீர் ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மதுரை ஆதீனம்
சீர்வளர்சீர் சிவஞான பாலய சுவாமிகள்

மயிலம் பொம்மபுர ஆதீனம்


மலர் வெளியிடுதல்:

மாநாட்டு விழா மலர் (ம) ஆய்வு மலர் வெளியிடுதல்


சிறப்புரை
மாண்பமை நீதியரசர் திரு. ஆர்.சுப்ரமணியன்
மாண்பமை நீதியரசர் திரு. பி.புகழேந்தி
மாண்பமை நீதியரசர் திரு வி.சிவஞானம்

நன்றியுரை
 பி.என்.ஸ்ரீதர் இ.ஆ.ப. ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரத்தில் அஷ்டமி பூப்பிரதட்சணம் யொட்டி ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்மன் தங்க ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மதுரை :  அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளக்கும் விதமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அஷ்டமி சப்பர வீதி ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடியில் எல்லா உயிர்களுக்கும் படி அளக்கும் விழாவையொட்டி, அஷ்டமி சப்பரங்களில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: திருவையாறில், ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 178 வது ஆராதனை விழா பந்தக்கால் முகூர்த்தம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar