சதுரகிரியில் மழையை பொறுத்தே பக்தர்கள் மலையேற அனுமதி; வனத்துறை அறிவிப்பு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2024 03:08
ஸ்ரீவில்லிபுத்துார்; சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பிரதோஷம், பவுர்ணமி வழிபாட்டிற்கு மழையை பொறுத்தே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அறிவித்துள்ளது. இக்கோயிலில் நாளை (ஆக.17) பிரதோஷம், ஆக. 19ல் பவுர்ணமி வழிபாடு நடக்கிறது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவர். இந்நிலையில் சதுரகிரி, தாணிப்பாறை பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால் ஓடைகளில் தண்ணீர் வரத்துள்ளது. தற்போது இந்திய வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே நாளை முதல் ஆக. 20 வரை பக்தர்கள் தாணிப்பாறை சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். தினசரி மழையளவு மற்றும் தண்ணீர் வரத்தினை பொறுத்தே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் அறிவித்துள்ளார்.