Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அகோபில வரதராஜ பெருமாள் கோவிலில் ... பழநியில் ஆக.24ல்  துவங்குகிறது அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ;  கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிப்பு பழநியில் ஆக.24ல் துவங்குகிறது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் புதிய பஸ்மக்குளம் : கேரள உயர் நீதிமன்றம் இடைக்கால தடை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சபரிமலையில் புதிய பஸ்மக்குளம் : கேரள உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

பதிவு செய்த நாள்

22 ஆக
2024
11:08

சபரிமலை; சபரிமலையில் புதிதாக பஸ்ம குளம் அமைக்கும் பணிக்கு கேரள உயர்நீதிமன்றம் இரண்டு வாரம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு உத்தரவிட்டுள்ளது.


சபரிமலை ஐதீகங்களுடன் தொடர்புடையது பஸ்ம குளம். இது தற்போது ஸ்ரீ கோயில் பின்புறம் அமைந்துள்ளது. கோயில் சுற்றுப்புறத்தின் மேற்கு பகுதியில் இந்த குளம் அமைந்துள்ளது. பண்டைய காலத்தில் பஸ்ம குளத்தில் பக்தர்கள் குளித்த பின்னர் ஐயப்பனை தரிசிப்பது வழக்கமாக இருந்தது. அதுபோல அங்க பிரதட்சணம் செய்யும் பக்தர்களும் பஸ்ம குளத்தில் குளித்த பின்னரே வந்து இங்கு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். தற்போது குளம் அமைந்துள்ள இடம் தாழ்வான பகுதி என்பதால் இங்குள்ள பல கட்டடங்களில் உள்ள கழிவு நீர் சுலபமாக பஸ்ம குளத்துக்குள் வந்துவிடுகிறது. அதுபோல மழைக்காலங்களில் தண்ணீர் இந்த குளத்தில் வந்து தேங்குகிறது. இதை தவிர்க்கும் வகையில் மேடான பகுதியில் கோயிலின் கிழக்கு பக்கம் பஸ்ம குளம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டினார். இதை எதிர்த்து பக்தர் ஒருவர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதன் மீது விசாரணை நடத்திய சபரிமலை டிவிஷன் பெஞ்ச் புதிய பஸ்ம குளம் அமைப்பது தொடர்பாகஉயர்மட்ட குழுவின் அனுமதி பெறப்பட்டுள்ளதா? எதற்காக பத்ம குளம் தற்போது உள்ள இடத்திலிருந்து மாற்றப்படுகிறது ?என்று கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக இரண்டு வாரத்துக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி கூறிய நீதிபதிகள் இரண்டு வாரத்துக்கு பணிகளை மேற்கொள்ள தடை விதித்து உத்தரவிட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 ... மேலும்
 
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar