Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news தசரா திருவிழா முன்னேற்பாடு: மைசூரு ...  உடுமலையில் கிருஷ்ணர் சிலைகள் விற்பனை ‘ஜோர்’ உடுமலையில் கிருஷ்ணர் சிலைகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கம்பம் சுருளி வேலப்பர் கோயில் மகா கும்பாபிஷேகம் : அரோகரா கோஷத்தால் அதிர்ந்த கோவில்!
எழுத்தின் அளவு:
கம்பம் சுருளி வேலப்பர் கோயில் மகா கும்பாபிஷேகம் : அரோகரா கோஷத்தால் அதிர்ந்த கோவில்!

பதிவு செய்த நாள்

22 ஆக
2024
03:08

கம்பம்; கம்பம் சுருளி வேலப்பர் என்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று காலை ஆயிரக்கணக்கான பத்தர்களின் அரோகரா கோஷத்திற்கிடையே கலசங்களில் புனித நீர் ஊற்றி நடைபெற்றது. கம்பம் நகரில் மையப் பகுதியில் அமைந்துள்ளது சுருளி வேலப்பர் என்ற சுப்பிரமணிய சுவாமி கோயில். கி.மு. 1211 ம் ஆண்டில் பாண்டிய மன்னன் ஜெயராஜ பாண்டிய ராஜா கட்டியதாக வரலாற்று சான்றுகள் கூறுகிறது. 1992 ல் மூலஸ்தனம் நீங்களாக முன் மண்டபம் இடித்து கோயிலாக கட்டப்பட்டுள்ளது. முருக பக்த சபையினர் முயற்சியில் வள்ளி தெய்வானை தனியாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. மூலவராக பால முருகன் மட்டுமே இன்று வரை இருக்கிறார். கடந்த . 2007 ல் முருக பக்த சபை தலைவரும் அப்போதும், இப்போதும் எம்.எல்.ஏ-வாக உள்ள என். ராமகிருஷ்ணன் தலைமையில் இந்த கோயிலில் சிவன் பார்வதிக்கு தனி மண்டபம், விநாயகர், நவக்கிரங்கள், பைரவர், வள்ளி தெய்வானையுடன் முருகன் தனி மூலஸ்தனம் கட்டி கடந்த 2009 ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதே முருகபக்த சபையினர் தற்போதும் திருப்பணிகள் செய்தனர். 


கடந்த ஆக. 19 ல் இருந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது. 18 யாக குண்டங்களில் சிவாச்சாரியார் ஜவஹர் தலைமையில் யாக வேள்விகள் நடைபெற்றது. இதற்கென கோயில் முன்பு பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டிருந்தது. இன்று அதிகாலை 5.45 மணிக்கு சுருளி வேலப்பர் மற்றும் பரிவார தெய்வங்களின் நான்காம் கால யாக வேள்விகள் நடைபெற்றது. . ருத்ர ஜெபம், வேத பாராயணத்தை தொடர்ந்து காலை 8.30 மணிக்கு கோ பூஜை, சுமங்கலி பூஜை, கன்னியா பூஜை, வடுக பூஜை, தொட்டு துலக்குதல், உயிர் ஊட்டுதல் நடைபெற்றது.. காலை 9 மணிக்கு கனி, மூலிகை வேள்வி, நிறையவி களித்தல். போரொளி வழிபாடு, புனித நீர் குட யாத்திரை அனுமதி பெறுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.. காலை 9.41 க்கு புனித நீர் குடங்கள் கடம் புறப்பாடு நடைபெற்று, ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுரங்களை சிவாச்சாரியார்கள் அடைந்தனர். சரியாக 10 மணிக்கு சுருளி வேலப்பர் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுர கலசங்களில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தினார்கள். அப்போது திரண்டிருந்த பக்தர்களின் அரோகரா கோஷம் கோயில் வளாகமே அதிர்ந்தது. தொடர்ந்து முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரத்தில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. முருக பக்த சபை சார்பில் மெகா அன்னதானம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் பங்கேற்றனர்.


இந்த நிகழ்ச்சியில் தங்கதமிழ்செல்வன் எம்.பி கோயில் தக்கார் அருணா தேவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திருப்பணி மற்றும் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை முருக பக்த சபை தலைவரும் எம்.எல்.ஏ. வுமான என்.ராமகிருஷ்ணன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கே.ஆர்.ஜெயப் பாண்டியன் , முருகேசன், முருக பக்த சபை உறுப்பினர்கள் எம்.எஸ்.எஸ். காந்தவாசன், கே.கே.டி. கருப்பசாமி, டாக்டர் எம். பாண்டியன், ஒ ஆர். நாராயணன், பேராசிரியர் கே.எஸ்.கண்ணன், கே. முத்துக் கண்ணு, கே. எஸ். கார்த்திகேயன், எஸ்.கே.எம்.ராமச்சந்திரராசா, எல். முருகன், வாசு முருகன், கே.வி. விஷ்ணுராம், எஸ். மாரியப்பன், டி. எஸ். ஆனந்த், பி. தியாகராசன், எஸ்.பால வேலவன், எஸ். சங்கரன், ஆர்.கே. செல்வக்குமார், ஆர். ரத்தினவேல் பாண்டியன், கோபால், ஏ. சக்திவேல், ஆர்.கே. செல்வக்குமார், என்.கேஎஸ் ரெங்கேஸ்வரன்.கே. சி. செல்வக்குமார் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நகராட்சி தலைவர் ராஜாமணி, எம். பி .எம். பள்ளி தாளாளர் மகுட காந்தன், டாக்டர் மோகன சுந்தரம், ஆர்த்தி பேக்கரி எஸ். ராஜேந்திரன், எம்.கே.எஸ். குழும சேர்மன் சந்திரசேகர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar