ஆவணி வெள்ளி; கோவை மாகாளியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஆக 2024 05:08
கோவை; என். எச் .ரோடு டவுன்ஹால் ரோடு சந்திப்பில் அமைந்துள்ள ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் ஆவணி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் பச்சை நிற வஸ்திரத்தில் புஷ்ப அலங்காரத்துடன் சந்தன காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாகாளியம்மனை தரிசனம் செய்தனர்.