Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முருகக் கடவுளின் அருமையும் பழநி ...  தாளக்கரை லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக விழா தாளக்கரை லட்சுமி நரசிம்ம பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு கோலாகலமாக துவங்கியது
எழுத்தின் அளவு:
பழநியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு கோலாகலமாக துவங்கியது

பதிவு செய்த நாள்

24 ஆக
2024
10:08

பழநி; பழநியில் ஹிந்து அறநிலைத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு துவங்கியது.  

பழநியில் ஹிந்து அறநிலைத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று காலை 8:00 மணி அளவில் திருவிளக்கு ஏற்றுதலுடன் துவங்கியது. மாநாட்டில் ஆய்வு மலர் வெளியிடுதல் மாநாடு விழா மலர் வெளியிடுதல் தொடர்ந்து நடைபெறும். நாளை ஆக.25., இன்னிசையுடன் மாநாடு துவங்க உள்ளது.

பழநியில் ஹிந்து சமய அறநிலையத்துறை உயர்நிலை செயல்திட்டக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 10 தீர்மானங்களில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்திட தீர்மானிக்கப்பட்டது. அதன்படி ஆக., 24, 25, இருநாட்கள் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி பழநியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லூரியில் மாநாட்டு அரங்கம், உணவுக்கூடம் வாகனங்கள் நிறுத்துமிடம், ஆய்வரங்கம். அறுபடை வீடுகளின் அரங்கங்கள், புகைப்படக் கண்காட்சி, வீ.ஆர்., 3டி தொழில்நுட்பத்துடன் கூடிய காட்சி அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பழநியில் நடைபெற உள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் 5 ஆய்வரங்கங்கள், வெளிநாட்டினர் உட்பட 1300 பேர் ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பிக்க உள்ளனர். நீதிபதிகள், ஆதீனங்கள், ஆன்மீக சொற்பொழிவாளர்கள், வெளிநாட்டினர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள உள்ளனர். மாநாட்டில் விழா மலர், ஆய்வுக்கட்டுரை மலர் வெளியிடப்படவுள்ளது. முருகன் பெருமையை விளக்கும் கும்மி ஆட்டம், கந்தசஷ்டி கவசம் பாடல்கள் , மாநாட்டு பாடல் இசைக்கப்படவுள்ளது. பழநியில் முருகன் கோயில் குறித்த 8 அலங்கார வளைவுகள், 100 அடி உயரமுள்ள மாநாட்டு கொடி, மலைக்கோயில் போன்ற முகப்பு பல்லாயிரக்கணக்கானோர் அமரும் வகையில் பந்தல் அமைக்கப்படவுள்ளது.

சுகாதாரப் பணிகள்,மாநாட்டில் சேரும் குப்பைகளை சுத்தம் செய்ய அதிக தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மருத்துவ வாகனங்களுடன் மருத்துவ முகாமகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், சாக்கடை வசதி, கழிப்பறைகளை அதிகளவில் அமைத்திடவும், மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வந்து செல்ல சக்கரநாற்காலிகள் வைக்கப்படும். மாநாட்டில் சாப்பிட வசதியாக ஸ்டால்கள், பக்தர்கள் அமர்ந்து சாப்பிடவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநாட்டு பங்கேற்க வரும் நபர்களுக்கு வழிகாட்ட தன்னார்வலர்கள், மாணவ மாணவிகளை பயன்படுத்திக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2000 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மாநாட்டிற்கு வரும் நபர்களுக்கு பஞ்சாமிர்தத்துடன் கூடிய பிரசாதம் வழங்கபடுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar