Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அமெரிக்க ஹிந்து கோவிலுக்கு ... சிங்கம்புணரி வீரமுத்தி அம்மன் கோவிலில் சங்காபிஷேகம் சிங்கம்புணரி வீரமுத்தி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துார் ஆவணி திருவிழா; விஷ்ணு அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் சண்முகர் வீதியுலா
எழுத்தின் அளவு:
திருச்செந்துார் ஆவணி திருவிழா; விஷ்ணு அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் சண்முகர் வீதியுலா

பதிவு செய்த நாள்

31 ஆக
2024
01:08

திருச்செந்துார்; திருச்செந்துார், சுப்பிரமணிய சுவாமி கோயில், ஆவணி திருவிழாவில் இன்று சுவாமி சண்முகர் ’பச்சை சாத்தி’ விழாவை முன்னிட்டு பல்வேறு அபிஷேகம் நடைபெற்று, பச்சை சாத்தி கோலத்தில் சண்முகர் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.


திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆவணி திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் 6ம் நாள் இரவு சுவாமி குமரவிடங்கபெருமான் வெள்ளித்தேரிலும், வள்ளிஅம்பாள் இந்திர வாகனத்திலும் எழுந்தருளி, உள் மாடவீதிகள் மற்றும் ரத வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தனர். திருவிழாவின் ஏழாம் திருநாளை முன்னிட்டு, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு மேல் 5:30 மணிக்குள், கடக லக்கனத்தில் சுவாமி சண்முகரின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, 8:45 மணியளவில் ஆறுமுகநயினார் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி, பக்த பெருமக்களுக்கு வாழ்வில் வெற்றியையும் ஏற்றத்தை தரும் ஏற்ற தரிசனம் கொடுத்து, பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்து சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 4:30 மணியளவில் சுவாமி சண்முகப்பெருமான் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி சிவன் அம்சத்தில் எழுந்தருளி, வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று (31ம் தேதி) அதிகாலை 5:00 மணிக்கு பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி பிரம்மன் அம்சத்தில் வீதி உலாவும், 10:30 மணிக்கு மேல் பச்சை சாத்தி பல்வேறு அபிஷேகம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி விஷ்ணு அம்சத்தில் எழுந்தருளி சண்முகர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் செப்., 2ம் தேதி நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar