Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்தம லிங்கேஸ்வரர் கோவிலில் ... திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் புரட்டாசி தீர்த்தவாரி திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழா துவக்கம்; அம்மனாக அலங்கரிக்க ஏழு சிறுமிகள் தேர்வு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழா துவக்கம்; அம்மனாக அலங்கரிக்க ஏழு சிறுமிகள் தேர்வு

பதிவு செய்த நாள்

17 செப்
2024
03:09

மேலுார்; வெள்ளலுாரில் ஏழை காத்தம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு அம்மனாக அலங்கரிக்கப்பட்ட ஏழு சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டனர்.


ஏழை காத்தம்மன் கோயில் திருவிழா வெள்ளலுார், உறங்கான்பட்டி, உள்ளிட்ட 60 கிராமத்தினர் கொண்டாடும் வெள்ளலுார் நாட்டின் திருவிழாவாகும். விழாவின் முக்கிய நிகழ்வான ஏழு சிறுமிகள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி வெள்ளலுார் மந்தையில் உள்ள ஏழைகாத்தம்மன் குடியிருப்பு கோயில் விட்டு முன் இன்று நடந்தது. பூசாரி சின்னதம்பி சிறுமிகளை தேர்வு செய்து கோயில் வீட்டிற்குள் அழைத்து சென்றார். தேர்வு செய்யப்பட்ட சிறுமிகள் 7 பேரும் 15 நாட்கள் கோயில் வீட்டில் தங்கி இருப்பார்கள். பிறகு கிராமங்களுக்கு சென்று மக்களுக்கு ஆசிர்வதிப்பார்கள். இந் நாட்களில் பொதுமக்கள் எண்ணெய் தாளிதம் இல்லாமலும், மாமிசம் சாப்பிடாமலும், மரம் வெட்டுதல், மாவு பிசைந்து சமைக்காமல் கடும் விரதம் இருப்பார்கள்.


செப் 24 ல் முளை பிடுங்கி ஆடுதல் (பானையில் இருக்கும் நெல்லை எடுப்பது), செப்.29 ல் அம்பலச்சோறு நிகழ்ச்சியும், 15 நாள் முடிவான அக். 1 ஏழு சிறுமிகள் முன்னே நடந்து செல்ல அம்பலகாரர்கள் தலைமையில் மக்கள் கோயில் வீட்டில் இருந்து 8 கி.மீ., தொலைவில் கோயில்பட்டியில் உள்ள ஏழை காத்தம்மன் கோயிலுக்கு நடந்து செல்வார்கள். அவர்களை தொடர்ந்து பெண்கள் தென்னங்குருத்தால் ஆன மதுக்கலயம் ஏந்தியும், நோய் நொடியின்றி வாழ வேண்டியவர்கள் உடலில் வைக்கோல் பிரி சுற்றியும், குழந்தை வரம் வேண்டியவர்கள் பதுமைகளை சுமந்தும் நேர்த்திக் கடன் செலுத்துவர். இதை தொடர்ந்து அக்.2 ல் தேரோட்டம், அக்3 மஞ்சள் நீராட்டும் மற்றும் அக்.8 கோயில் முன் உள்ள குளத்தில் பெரிய மது கரைத்தல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. 


திருவிழா தோன்றிய வரலாறு: வெள்ளலுார் நாட்டை சேர்ந்த அக்கா, தங்கை இருவரில் தங்கைக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன. இக் குழந்தைகளை தன்குழந்தைகளாக பாவித்து அக்கா வளர்க்க ஆரம்பித்தார். இதனால் தன் குழந்தைகள் தன்னை விட்டு பிரிந்து விடுமோ என்று பயந்து அக்கா தேடிவந்த போது குழந்தைகளை கூடைக்குள் மறைத்து வைத்து விட்டு வெளியே சென்றதாக பொய் சொன்னார். அக்கா சென்ற பிறகு கூடையை திறந்து பார்த்த போது ஏழு குழந்தைகளும் கற் சிலையாக மாறியிருந்தனர். பின்னர் ஏழை காத்தம்மனை வேண்டியதால் குழந்தைகள் உயிர் பெற்றதாக ஐதீகம். இந்நிகழ்வை நினைவு படுத்தும் விதமாக இத்திருவிழா நடக்கிறது. இத்திருவிழாவில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar