Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ... சுந்தராபுரம் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் சுந்தராபுரம் சுப்பிரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி விழாவிற்காக கொலு பொம்மைகள் விற்பனை செய்யும் பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
நவராத்திரி விழாவிற்காக கொலு பொம்மைகள் விற்பனை செய்யும் பணி தீவிரம்

பதிவு செய்த நாள்

24 செப்
2024
11:09

மானாமதுரை; மானாமதுரையில் நவராத்திரி விழாவில் வீடுகள் மற்றும் கோயில்களில் வைத்து வழிபடக்கூடிய கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து ஏராளமானோர் கொலு பொம்மைகளை வாங்கி சென்று வருகின்றனர்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் வருடம் தோறும் சீசனுக்கு தகுந்தாற்போல் களிமண்ணாலான மண்பாண்ட பொருட்களை தயார் செய்து வருகின்றனர். இந்நிலையில் அக்.3ம் தேதி துவங்க உள்ள நவராத்திரி விழாவிற்காக சுவாமி சிலைகள், திருப்பதி பிரமோற்சவ சிலைகள், அத்தி வரதர் சிலை,அர்த்தநாரீஸ்வரர், சங்கரநாராயணன்,அழகர் சுவாமி, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்,தேரோட்டம், மனுநீதிச் சோழன், தலைவர்கள்,தியாகிகள் சிலைகள்,பறவைகள் மற்றும் விலங்கு பொம்மைகள்,ஆண்டாள் பொம்மைகள் என வீடுகள் மற்றும் கோயில்களில் வைக்கப்படும் கொலுவை அலங்கரிக்கக்கூடிய கொலு பொம்மைகள் மானாமதுரை மண்பாண்ட கூட்டுறவு சங்கத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.இதனை தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வாங்கி சென்று வருகின்றனர். இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது, மானாமதுரையில் தயாரிக்கப்படும் மண்பாண்ட பொருள்களுக்கு என்று தனி மவுசு உள்ளது.அதற்காகவே வருடம் தோறும் சீசனுக்கு தகுந்தாற்போல் மண்பாண்ட பொருட்களை தரத்தோடும், கலைநயத்தோடும் தயார் செய்து வருகிறோம். தற்போது வரவுள்ள நவராத்திரி விழாவிற்காக ரூ.50 லிருந்து ரூ.2 ஆயிரம் வரையிலான கொலு பொம்மைகள் தயார் செய்து விற்பனைக்கு வைத்துள்ளோம். இன்னும் சில தினங்களில் மேலும் பல்வேறு வடிவங்களில் பல்வேறு வகையான கொலு பொம்மைகளும் விற்பனைக்கு வர உள்ளதாக தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar