Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கரிவலம்வந்தநல்லுார் சொரிமுத்து ... ரஷ்யா, உக்ரைன் தோழியர் தமிழக கோவில்களில் வழிபாடு ரஷ்யா, உக்ரைன் தோழியர் தமிழக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துார் கோயில் ராஜகோபுர கலசங்கள் புதுப்பிக்கும் பணி தீவிரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருச்செந்துார் கோயில் ராஜகோபுர கலசங்கள் புதுப்பிக்கும் பணி தீவிரம்

பதிவு செய்த நாள்

24 செப்
2024
03:09

துாத்துக்குடி; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 


பக்தர்கள் வசதிக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஹெச்.சி.எல்., நிறுவனம் சார்பில், 200 கோடி ரூபாய் செலவில் பெருந்திட்ட வளாக பணிகள் நடந்து வருகிறது. அறநிலையத்துறை சார்பில் 100 கோடி ரூபாய் செலவில் கும்பாபிஷேக திருப்பணிகளும் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு கும்பாபிஷேகம் நடக்க உள்ள நிலையில், 137 அடி உயரமும், 9 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள் மும்முரமாக நடக்கிறது. ராஜகோபுரத்தின் மேல் பகுதியில் உள்ள 9 கலசங்கள் ஆகம விதிமுறைப்படி பூஜை செய்யப்பட்டு தனியாக பிரித்து கழற்றி கீழே கொண்டு வரப்பட்டு புதுப்பிக்கும் பணிகள் செய்யப்படுகிறது. பிரித்தெடுக்கப்பட்ட 9 கலசங்கள் ராஜகோபுரம் கீழ்பகுதியில் வைத்து புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. கும்ப கலசங்களை பண்ருட்டியைச் சேர்ந்த ஸ்தபதி சரவணன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் புதுப்பித்து வருகின்றனர். செம்புகளால் ஆன கலசத்தில் 11 அடுக்குகள் உள்ளன. மொத்தமுள்ள 9 கலசங்களை புதுப்பிக்கும் பணி இன்னும் இரண்டு மாதத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் கலசங்களில் உள்ள அழுக்கு தனியாக பிரித்து எடுக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து பழுது பார்க்கப்பட்டு புதுப்பிக்கும் பணிகள் நடக்கிறது. புதுப்பிக்கும் பணிகளை கோவில் தக்கார் அருள்முருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கோவில் இணை கமிஷனர் ஞானசேகரன், தூத்துக்குடி மண்டல துணை கமிஷனர் செல்வி ஆகியோர் உடனிருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை: ஆவணி மாதம் துவாதசி  திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar