Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவராத்திரி விழா; அன்னப்பட்சி ... மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்; கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள் மேல்மலையனுார் அங்காளம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்றக்குடி கோயில் யானை தீயில் சிக்கி பரிதாப பலி; பாகனை கைது செய்த வனத்துறை
எழுத்தின் அளவு:
குன்றக்குடி கோயில் யானை தீயில் சிக்கி பரிதாப பலி; பாகனை கைது செய்த வனத்துறை

பதிவு செய்த நாள்

03 அக்
2024
04:10

சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயில் யானை சுப்புலட்சுமி 53, தீயில் கருகி பரிதாபமாக இறந்தது தொடர்பாக பாகன் கார்த்தியை 45, வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.


சிவகங்கை மாவட்டம் ஆத்தங்குடியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் 1971 ல் குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலுக்கு பெண் யானை சுப்புலட்சுமியை வழங்கினார். 53 ஆண்டுகளாக குன்றக்குடி வரும் பக்தர்களின் செல்ல பிள்ளையாகவே சுப்புலட்சுமி வாழ்ந்தது.


செப்., 11 இரவு 11:00 மணிக்கு யானை தங்கியிருந்த தகர கொட்டகைக்கு கீழ் கட்டியிருந்த தென்னந்தட்டியில் தீப்பற்றி யானை காயமடைந்தது. தீக்காயத்துடன் யானைக்கு சிகிச்சை அளித்த கால்நடை பல்கலை டாக்டர்கள் 72 மணி நேரத்திற்கு பின் தான் உடல் நிலை சீராகுமா என தெரியும் என கூறினர். ஆனால் காயமுற்ற 25 மணி நேரத்திற்குள் செப்., 13 அதிகாலை 2:00 மணிக்கு யானை இறந்தது. பக்தர்கள் கண்ணீர் மல்க யானை கோயிலுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. மாவட்ட வன அலுவலர் பிரபாவதி தலைமையில் வனத்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். முதற் கட்ட விசாரணையில் யானையை அடக்க பயன்படும் ‛அங்குசத்திற்கு’ செப்., 11 இரவு 10:00 மணிக்கு விளக்கு ஏற்றி வழிபட்ட பின் அவ்விளக்கை அணைக்காமல் பாகன் வீட்டிற்கு சென்று விட்டார். அந்த விளக்கிலுள்ள தீ பரவியதில் தான் யானை பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. இதையடுத்து பாகன் குன்றக்குடி கார்த்தியை 45, வனத்துறை அதிகாரிகள் கைது செய்து ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.


பாகனின் கவனக்குறைவு: வன அலுவலர் பிரபாவதி கூறியதாவது: பாகன் யானை காலில் செயின் போடாமல் அதை நேரடி கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். அன்று இரவு யானையின் காலில் செயின் கட்டிவிட்டு, வீட்டிற்கு சென்றுள்ளார். கவனக்குறைவாக இருந்ததற்காக அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தோம் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar