ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவிலில் குங்கும அர்ச்சனை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2024 12:10
திருப்பூர்; திருப்பூர் - ஸ்ரீபுரம், அவிநாசி அருகே ராக்கியாபாளையம், ஐஸ்வர்யா கார்டனிலுள்ள ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவிலில் நவராத்திரி விழா நேற்று துவங்கியது. விழா துவக்கமாக அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின், மேடையில் அலங்கரிக்கபட்ட ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள், ஸ்ரீலட்சுமி, ஸ்ரீசரஸ்வதி தேவி உற்சவர்களுக்கு விஷேச உபசார பூஜையும், பக்தர்கள் பங்குபெற்ற குங்கும அர்ச்சனை வழிபாடும், தொடர்ந்து லலிதா சகஸ்ரநாம பாராயணமும் நடைபெற்றது. நிறைவாக மஹா தீபாராதனை நடந்து, அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களிலும் மாலை, 6:00 மணிக்கு குங்கும அர்ச்சனை வழிபாடு நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.