ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் காணிக்கை எண்ணும் பணி
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17அக் 2024 07:10
ரிஷிவந்தியம்; ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. ரிஷிவந்தியத்தில் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த ஏதுவாக 4 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உண்டியல் காணிக்கை பணம் எண்ணும் பணி நேற்று நடந்தது. எறையூர் அறநிலையத்துறை சரக ஆய்வாளர் புருஷோத்தமன் தலைமையில் செயல் அலுவலர் வேல்விழி மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு, அதிலிருந்த பணம் எண்ணப்பட்டது. கோவில் பணியாளர் விமல் மற்றும் சிலர் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், 1 லட்சத்து 34 ஆயிரத்து 861 ரூபாய்- காணிக்கை பணம் இருந்தது. தொடர்ந்து, கோவில் வங்கி கணக்கில் காணிக்கை பணம் செலுத்தப்பட்டது. ரிஷிவந்தியம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.