Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செஞ்சி காசி விஸ்வநாதர் கோவிலில் ... திருச்செந்துாரில் பவுர்ணமி வழிபாடு; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் திருச்செந்துாரில் பவுர்ணமி வழிபாடு; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் திருஷ்டி நீங்க சாமுண்டி மலையில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் திருஷ்டி நீங்க சாமுண்டி மலையில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

17 அக்
2024
07:10

மைசூரு; மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் மீதான திருஷ்டி நீங்குவதற்காக, சாமுண்டி மலையில் நேற்று தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.


மைசூரு தசராவின் சிகர நிகழ்ச்சியாக நடக்கும், ஜம்பு சவாரி ஊர்வலத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட, தங்க அம்பாரியை யானை சுமந்து செல்லும். சாலையின் இருபுறமும் கூடி நிற்கும் மக்கள், யானை மீது இருக்கும் அம்மனை தரிசிப்பர். தசரா முடிந்த ஐந்து நாட்களுக்குள், சாமுண்டி மலையில் தேரோட்டம் நடக்கும். ஜம்பு சவாரியின் போது அம்மன் மீது விழுந்து இருக்கும் திருஷ்டியை நீக்குவதற்கு தேரோட்டம் நடத்துவதாக சொல்லப்படுகிறது. அதன்படி நேற்று காலை 9:15 மணிக்கு தேரோட்டம் நடந்தது. சாமுண்டீஸ்வரி தொகுதி ம.ஜ.த., – எம்.எல்.ஏ., ஜி.டி., தேவகவுடா, வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். கோவிலை சுற்றி வந்த தேரில் இருந்த அம்மனை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அடிவாரத்தில் இருந்து படிக்கட்டுகள் வழியாக வந்தும், அம்மனை பக்தர்கள் தரிசித்தனர். யதுவீர் – திரிஷிகா குமாரிக்கு இரண்டாவது குழந்தை பிறந்து இருப்பதால், மன்னர் குடும்பத்தில் இருந்து யாரும், தேரோட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இன்று இரவு 7:00 மணிக்கு சாமுண்டி மலையில் உள்ள, தேவிகெரே குளத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்திருவிழா  நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான அங்காள பரமேஸ்வரி குருநாத ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar